மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 ஜன 2018

மாதாந்திர பாஸ்: கூடுதல் கட்டணம் இல்லை!

மாதாந்திர பாஸ்: கூடுதல் கட்டணம் இல்லை!

தமிழ்நாட்டில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அரசு பேருந்து கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு நேற்று (ஜனவரி 20) முதல் அமலுக்கு வந்துள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணம் செய்வதற்காக மாதாந்திர கட்டண பாஸ், வாராந்திர கட்டண பாஸ், தினசரி கட்டண பாஸ் ஆகியவை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் பேருந்து கட்டண உயர்வால் ரூ.50 கட்டணம் கொண்ட தினசரி பேருந்து பாஸ் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

இதையடுத்து மாதாந்திர பேருந்து பாஸ் மற்றும் ரூ.1,000க்கு உரிய பயண அட்டை வைத்திருப்பவர்கள், பேருந்து பாஸில் குறிப்பிட்டுள்ள தேதி முடிவுறும் வரை கூடுதல் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

“சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் ஒருநாள் விருப்பம்போல் பயணம் செய்யும் 50 ரூபாய் கட்டண தினசரி பாஸ் தற்போது வழங்கப்படுவதில்லை. புதிய கட்டணம் நிர்ணயம் செய்த பின்னர் தினசரி பாஸ் வழங்கப்படும். மேலும், மாநகரப் போக்குவரத்துக் கழக கவுன்ட்டர்களில் ஏற்கெனவே வழங்கப்பட்ட மாதாந்திர பேருந்து பாஸ் மற்றும் ரூ.1,000க்கு உரியப் பயண அட்டை வைத்திருப்பவர்கள், பேருந்து (பஸ்) பாஸில் குறிப்பிட்டுள்ள தேதி முடிவுறும் வரை கூடுதல் கட்டணமின்றி பயணம் செய்யலாம்.

புதிய பேருந்து கட்டணத்தில் சாதாரண பேருந்துகளில் குறைந்தபட்சம் 5 ரூபாயும், அதிகபட்சம் 23 ரூபாயும், விரைவு பேருந்துகளில் குறைந்தபட்சம் 8 ரூபாயும், அதிகபட்சம் 35 ரூபாயும், சொகுசு பேருந்துகளில் குறைந்தபட்சம் 12 ரூபாயும், அதிகபட்சம் 48 ரூபாயும், குளிர்சாதன பேருந்துகளில் குறைந்தபட்சம் 25 ரூபாயும், அதிகபட்சம் 125 ரூபாயும் ஆக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது” எனச் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

ஞாயிறு 21 ஜன 2018