மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 ஜன 2018

இரண்டு மணி நேரம் போராடிய ஜோகோவிச்

இரண்டு மணி நேரம் போராடிய ஜோகோவிச்

ஆஸ்திரேலிய ஓப்பன் தொடரில் நேற்று (ஜனவரி 20) நடைபெற்ற போட்டியில் காயம் காரணத்தால் அவதிப்பட்டுவந்த ஜோகோவிச் விடாமுயற்சியால் இரண்டு மணி நேரத்துக்குப் பின்னர் போட்டியைக் கைப்பற்றினார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் நடைபெற்றுவரும் ஆஸ்திரேலிய ஒப்பன் தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான மூன்றாவது சுற்று ஆட்டத்தில் முதல் நிலை வீரர்களில் ஒருவரான நவாக் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் ஆல்பர்ட் ராமோஸ் உடன் மோதினார்.

முதல் செட்டிலேயே இருவரும் சிறப்பாக ஆடியதால் சுமார் 40 நிமிடங்கள் முதல் செட் நடைபெற்றது. அதில் ஜோகோவிச் 6-2 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார். கடந்த ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் போட்டியின்போது காயம் காரணத்தால் விலகிய ஜோகோவிச் மீண்டும் களமிறங்கி விளையாடினாலும், அவரால் இன்னும் சரிவர விளையாட முடியவில்லை. எனவே, நேற்று நடைபெற்ற போட்டியில் இரண்டாவது செட்டின் இடையே காயத்தின் வலி தாங்கமுடியாமல் சிகிச்சை பெற்றார். இதேபோன்று தொடர்ந்து மூன்று முறை மருத்துவர்கள் இடையே வரவழைக்கப்பட்டு ஜோகோவிச்சுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.

இருப்பினும் போட்டியில் இருந்து விலகாமல் தொடர்ந்து போராடிய ஜோகோவிச் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்டைக் கைப்பற்றி வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய ஒப்பனின் நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ள அவர், நாளை (ஜனவரி 22) நடைபெறவிருக்கும் போட்டியில் கொரிய வீரர் சூங் ஹையோன் உடன் மோத உள்ளார்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

ஞாயிறு 21 ஜன 2018