மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 ஜன 2018

ஆளுநர் ஆய்வு: திமுக கறுப்புக்கொடி!

ஆளுநர் ஆய்வு: திமுக கறுப்புக்கொடி!

தர்மபுரி அருகே தூய்மை இந்தியா திட்டத்தை ஆய்வுசெய்த ஆளுநருக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக சார்பில் கறுப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தப்பட்டது.

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் கடந்த அக்டோபர் மாதம் பதவியேற்றார். பதவியேற்று ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், நவம்பர் மாதம் கோவையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்பு, மத்திய அரசின் திட்டப்பணிகள் குறித்து ஆய்வும் மேற்கொண்டார். இதற்குப் பல்வேறு கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இது மாநில சுயாட்சிக்கு எதிரானது என்றும் குற்றம்சாட்டின. ஆனால், ஆளுநரின் ஆய்வு நெல்லை, கன்னியாகுமரி, கடலூர், தஞ்சை எனத் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. ஆளுநர் செல்லும் அனைத்து இடங்களிலும் திமுகவினர் கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று (ஜனவரி 21) தர்மபுரி மாவட்டம் கக்கன்ஜிபுரத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட தனிநபர் கழிவறையை ஆளுநர் பன்வாரிலால் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுமக்களுடன் இணைந்து தூய்மை இந்தியா திட்டத்தின் உறுதிமொழியையும் ஏற்றார். பின்னர், ஒட்டப்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தில் ஆய்வுசெய்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அலுவலக வளாகத்தில் இருந்த குப்பைகளை அகற்றும் பணியிலும் ஈடுபட்டார்.

இந்த நிலையில் ஆளுநரின் ஆய்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக ஒட்டப்பட்டியில் திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களைக் கட்டுப்படுத்த அதிகளவில் போலீஸார் குவிக்கப்பட்டதால், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஆனாலும் தொடர்ந்து தர்மபுரி சுற்றுலா மாளிகையில் மாவட்ட ஆட்சியர், வருவாய் துறை அதிகாரிகளுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆலோசனை நடத்தி வருகிறார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

ஞாயிறு 21 ஜன 2018