மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 ஜன 2018

சன் டிவிக்கு நடிகர்கள் சங்கம் கடிதம்!

சன் டிவிக்கு நடிகர்கள் சங்கம் கடிதம்!

சன் மியூசிக் தொகுப்பாளினிகள் இருவர், நடிகர் சூர்யாவின் உயரம் குறித்து விமர்சித்த நிலையில் சன் டிவிக்குத் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.

தொகுப்பாளினிகளின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சூர்யாவின் ரசிகர்கள் சிலர் சன் தொலைக்காட்சி நிறுவனம் முன்பு நேற்று (ஜனவரி 20) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து சூர்யா, “தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்குச் செலவிடுங்கள். சமூகம் பயன் பெற”என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், சன் டிவி நிறுவனத்துக்கு நடிகர்கள் சங்கம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

நடிகர்கள் சங்கப் பொதுச்செயலாளர் விஷால் கையொப்பத்துடன் அனுப்பப்பட்டுள்ள இந்த கடிதத்தில், “சமீபத்தில் உங்களது சேனலில் வெளியான சினிமா தொடர்பான நிகழ்ச்சியில் எங்கள் நடிகர் சங்கத்தின் மதிப்பிற்குரிய மூத்த உறுப்பினர் திரு.சூர்யாவின் உருவ அமைப்பைப் பற்றி கேலி செய்யும்விதமாக இரு இளம் பெண்கள் பேசிய தொகுப்பு வெளியானது. தனிப்பட்ட ஒருவரை பற்றி இதைப் போன்ற அநாகரிகமான தேவையற்ற விமர்சனங்கள் வெளியாவது உங்களைப் போன்ற சேனல்களுக்குப் பொருத்தமானது அல்ல.

சட்டத்தின்படி, சராசரி குடிமக்களை போல் ஒரு நடிகருக்கும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை, நாகரிகம், அடிப்படை மரியாதையுடன் கூடிய சம அளவிலான பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எனவே, மேற்கண்ட காட்சியை வெளியிட தங்களது நிறுவனம் அனுமதித்திருக்கக் கூடாது எனக் கருதுகிறோம்.

ஊடகத்துறையில் எங்களது நீண்டகால கூட்டாளி என்னும் வகையில் உங்களது சன் குழும நிகழ்ச்சிகளில் எங்களது பணிகளைப் பற்றிய எவ்வித விமர்சனங்களையும் வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், எங்களது மூத்த உறுப்பினரும், மரியாதைக்குரிய நடிகருமான ஒருவரை காயப்படுத்தும் வகையில், அர்த்தமில்லாத இதைப்போன்ற நிகழ்ச்சிகளை நாங்கள் சகித்துக் கொள்ளவோ, மன்னிக்கவோ முடியாது என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

மேற்கண்ட நிகழ்ச்சி ஒளிபரப்புக்குக் காரணமானவர்கள்மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், இதுபோன்ற கசப்பான காட்சிகள் உங்களது குழுமத்துக்குச் சொந்தமான சேனல்களில் இனி ஒளிபரப்பாகாது என்ற உத்தரவாதத்தை நீங்கள் அளிக்க வேண்டும்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

ஞாயிறு 21 ஜன 2018