மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 ஜன 2018

வந்துவிட்டது பேடிஎம் டெபிட் கார்டு!

வந்துவிட்டது பேடிஎம் டெபிட் கார்டு!

பேடிஎம் நிறுவனம் தங்களது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் டெபிட் கார்டு வசதியை அறிமுகம் செய்துள்ளது.

இத்திட்டம் குறித்து பேடிஎம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ரேணு செட்டி, “பேடிஎம் வாடிக்கையாளர் பயன்பெறும் வகையில் தற்போது பேடிஎம் ‘ரூபே டெபிட் கார்டு’ வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நாடெங்கிலும் உள்ள பேடிஎம் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் பணப்பரிவர்த்தனைகள் செய்துகொள்ளலாம். வாடிக்கையாளர்கள் தங்கள் அன்றாடப் பொருள்கள் வாங்கும் கடைகளில் மற்ற வங்கிகளின் டெபிட் கார்டுகளை ஸ்வைப் செய்வது போலவே, பேடிஎம் டெபிட் கார்டுகளையும் ஸ்வைப் செய்து கொள்ளலாம். இந்தச் சேவையை ரூ.120 செலுத்தி பேடிஎம் செயலியில் முன்பதிவு செய்தால், டெபிட் கார்டுகள் வாடிக்கையாளர்களின் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜீரோ பேலன்ஸ் கணக்குகளுடன் பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கிச் சேவை தொடங்கப்பட்டது. தற்போது இந்தியாவில் பேடிஎம் வங்கியைப் போல ஏர்டெல் பேமென்ட் வங்கி, இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி, பினோ பேமென்ட் வங்கி ஆகிய வங்கிகள் இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

ஞாயிறு 21 ஜன 2018