மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 ஜன 2018

தெலுங்குத் திரையுலகில் பிரசாந்த்

தெலுங்குத் திரையுலகில் பிரசாந்த்

ராம்சரண் நடிக்கும் தெலுங்குப் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க பிரசாந்த் ஒப்பந்தமாகியுள்ளார்.

90களில் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம்வந்தவர் பிரசாந்த். பெரும்பாலான முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்துள்ள இவர், சமீபகாலமாக அதிகளவில் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. தற்போது இவர் நடித்துவரும் படம் ‘ஜானி’. வெற்றிச்செல்வன் இயக்கும் இந்தப் படத்தை அவருடைய தந்தை தியாகராஜன் தனது ஸ்டார் மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

தற்போது இந்தப் படத்தை தொடர்ந்து ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் தெலுங்குப் படம் ஒன்றில் அவருக்குச் சகோதரராக நடிக்க பிரசாந்த் ஒப்பந்தமாகியுள்ளார். 1992, 93ஆம் ஆண்டுகளில் தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்த பிரசாந்த் தற்போது 25 வருடங்களுக்குப் பின் தெலுங்குத் திரையுலகம் பக்கம் சென்றுள்ளார். ‘எம்.எஸ் தோனி: அன் டோல்டு ஸ்டோரி’ படம் மூலம் கவனம்பெற்ற கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். பாயாபட்டி ஸ்ரீனு இயக்குகிறார். இந்தப் படத்தின் பூஜை கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 19) ஹைதராபாத்தில் நடைபெற்றது.

அஜித் நடித்த விவேகம் படம் மூலம் தமிழில் அறிமுகமான விவேக் ஓபராய் வில்லன் வேடம் ஏற்று நடிக்கிறார். டிவிவி தன்யா படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறார். வரலாற்று திரைப்படமாக உருவாகிவரும் ரங்கஸ்தலம் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்ததும் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் ராம்சரண் கலந்துகொள்ள உள்ளார்.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

ஞாயிறு 21 ஜன 2018