காகித விலை உயர்வு!

காகித உற்பத்தியாளர்கள் காகித விலையை 2.5 சதவிகிதம் உயர்த்தியுள்ளனர்.
காகித உற்பத்தியாளர்கள் அனைத்துவிதமான காகிதத் தயாரிப்புகளின் விலையையும் உயர்த்தியுள்ளனர். காகிதத் தயாரிப்புக்கான உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதே, காகித விலையுயர்வுக்குக் காரணமென்றும் காகிதத் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கடந்த மூன்று மாதங்களில் தற்போது மூன்றாவது முறையாகக் காகித விலை உயர்த்தப்பட்டுள்ளது.
சில முக்கிய காகிதங்களின் விலை 5 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. தற்போதைய விலையுயர்வின்படி எழுதுகிற மற்றும் அச்சிடுகின்ற காகிதங்கள் டன் ஒன்றுக்கு ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இக்காலகட்டத்தில் விலையுயர்வு மேற்கொள்வதைக் காகித ஆலைகள் வழக்கமாகவே கொண்டுள்ளன. இந்தக் காலகட்டத்தில் பள்ளி, கல்லூரி நோட்டுகள் மற்றும் புத்தகங்களுக்குத் தேவை அதிகரிப்பதால் உற்பத்தி நிறுவனங்கள் விலை உயர்வை மேற்கொள்கின்றன. இம்முறை காகிதத் தயாரிப்புக்கான உற்பத்திப் பொருள்கள் விலை உயர்ந்ததும் காகித விலை உயர்வுக்கு ஒரு காரணமாகும்.