மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 ஜன 2018

மோசமான சாதனை படைத்த சாம்பியன்ஸ்!

மோசமான சாதனை படைத்த சாம்பியன்ஸ்!

ஐ.எஸ்.எல் தொடரில் நேற்று (ஜனவரி 20) நடைபெற்ற போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி தோல்வியைத் தழுவியது.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் நான்காவது சீசன் கடந்த நவம்பர் (2017) மாதம் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதி வாய்ப்பைப் பெறும் என்பதால் கடுமையான போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

அதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி, புனே சிட்டி அணியை எதிர்கொண்டது. புனேவில் உள்ள சத்ரபதி விளையாட்டு மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதுவரை இந்த மைதானத்தில் நடைபெற்றுள்ள அனைத்துப் போட்டிகளிலும் கொல்கத்தா அணி தோல்வியைத் தழுவி உள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியிலும் புனே அணியிடம் 0-3 என்ற கோல் கணக்கில் கொல்கத்தா அணி தோல்வியைத் தழுவி மோசமான சாதனையைப் படைத்துள்ளது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

ஞாயிறு 21 ஜன 2018