மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 ஜன 2018

இஸ்ரேல் பிரதமருடன் பாலிவுட் பிரபலங்கள்!

இஸ்ரேல் பிரதமருடன் பாலிவுட் பிரபலங்கள்!

இந்தியாவுக்கு நான்கு நாள்கள் பயணமாக வருகைதந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ கூறுகையில், “இந்தியாவிலும் இஸ்ரேலிலும் உள்ள அனைவருக்கும் நமது நாடுகளுக்கு இடையிலான நட்பு பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மேலும், மிகவும் பிரபலமான படம் ஒன்று ஆஸ்கர் மேடையில் இடம்பெற்றது. அதில் பல பிரபலங்கள் ஒன்றாக இருந்தனர். அதேபோல் பிரபலங்கள் ஒன்றிணையும்போது எடுத்துக்கொள்ளப்படும் புகைப்படம் மிகவும் அவசியம். அதனால்தான் தற்போது நான் பாலிவுட்டில் இருக்கும் நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள் என அனைவருடனும் இணைந்து செல்ஃபி எடுத்துக்கொள்கிறேன். இந்தப் புகைப்படத்தை பார்க்கும் அனைவரும் நம் இரு நாட்டாரின் நட்பைப் புரிந்துகொள்வார்கள். என்னைவிட ட்விட்டரை பின்பற்றுவோர் எண்ணிக்கையில் 30 மில்லியன் பேரை அதிகமாக வைத்துள்ளார் அமிதாப்” என்று தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் நாட்டில் முதன்முறையாக ஐஸ்வர்யா ராய் நடிக்கும் ‘டிரைவ்’ திரைப்படம் எடுக்கப்படுகிறது. இதற்கு அனுமதி கொடுத்த இஸ்ரேல் நாட்டுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாகச் சாரா நேதன்யாஹூக்கு பூங்கொத்து கொடுத்தார் ஐஸ்வர்யா ராய்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

ஞாயிறு 21 ஜன 2018