மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 ஜன 2018

சிந்தியா பாண்டியன் காலமானார்!

சிந்தியா பாண்டியன் காலமானார்!

முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியனின் மனைவியும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான சிந்தியா பாண்டியன் நேற்று (ஜனவரி 20) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

கடந்த சில நாள்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டுவந்த சிந்தியா பாண்டியன், தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்தார். அவரது உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 71.

சிந்தியாவின் உடல் சென்னை அண்ணாநகரிலுள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு முதல்வர், துணை முதல்வர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு நன்கு அறிமுகமானவர் சிந்தியா, அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்” என்று குறிப்பிட்டுள்ளார். துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறுகையில், “இது எங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பு, பி.ஹெச்.பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

சிந்தியாவின் உடலுக்கு இன்று மாலை இறுதிச்சடங்கு நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். மறைந்த சிந்தியா பாண்டியன் கடந்த 2005 முதல் 2008 வரை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்துள்ளார். உயர்கல்வி ஆணையத்தின் ஆணையராகவும் இருந்த சிந்தியா, கடந்த 2009ஆம் ஆண்டு அதிமுக சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

ஞாயிறு 21 ஜன 2018