மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 ஜன 2018

சென்னையில் 23 கிலோ கஞ்சா பறிமுதல்!

சென்னையில் 23 கிலோ கஞ்சா பறிமுதல்!

சென்னையில் நேற்று போலீஸார் வெவ்வேறு இடங்களில் நடத்திய வாகனச் சோதனையின்போது கஞ்சா கடத்திய ஆறு பேர் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து 23 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை மெரினா காமராஜர் சாலை விவேகானந்தர் இல்லம் அருகே நேற்று நள்ளிரவு மெரினா போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக வேகமாகச் சென்ற ஆட்டோ ஒன்றை மடக்கிப் பிடித்து சோதனை செய்ததில், 15 கிலோ கஞ்சா பதுக்கிக்கொண்டு செல்லப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. தப்பி ஓட முயன்ற ஆட்டோவில் இருந்த நான்கு பேரை மெரினா போலீஸார் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர்.

அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், அவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது. அந்த நால்வரையும் போலீஸார் கைது செய்து நடத்திய விசாரணையில், சென்னை சென்ட்ரலில் இருந்து சோழிங்கநல்லூருக்கு கஞ்சாவைக் கொண்டு செல்லும்போது போலீஸில் சிக்கிக் கொண்டனர். கஞ்சாவை இவர்களிடம் கொடுத்து அனுப்பியது யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், சென்னை மண்ணடி பகுதியில் இருசக்கர வாகனத்தில் 8 கிலோ கஞ்சாவைப் பதுக்கிக்கொண்டு சென்ற இரண்டு பேரை வடக்கு கடற்கரை போலீஸார் கைது செய்தனர். அதில் ஒருவர் பிசியோதெரபிஸ்ட் படிக்கும் கல்லூரி மாணவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களுக்கு கஞ்சா கொடுத்தனுப்பியது சர்வதேச போதைப்பொருட்கள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த அல்அமீன் என்பது தெரிந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் அவரையும் தேடிவருகின்றனர். மெரினாவில் பிடிபட்ட கஞ்சா சம்பவத்துக்கும் அல்அமீனுக்கும் தொடர்பு இருக்கலாமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதுகுறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

ஞாயிறு 21 ஜன 2018