மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 ஜன 2018

கேரளாவில் கருத்து சுதந்திரம் உள்ளது!

கேரளாவில் கருத்து சுதந்திரம் உள்ளது!

‘தமிழகத்தைவிட கேரளாவில் கலைஞர்களுக்கான சுதந்திரம் என்பது அதிகமாக இருக்கிறது’ என்று நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் கூறியுள்ளார்.

'ஃப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கேணி’. தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் இந்தப் படத்தைக் கதை, திரைக்கதை எழுதி இயக்கியக்கியுள்ளார் எம்.ஏ.நிஷாத். கேரளா - தமிழ்நாடு எல்லையில் நடக்கும் சம்பவங்களைக்கொண்டு, இந்தத் தேசத்துக்கான முக்கிய பிரச்னையாக இருக்கக்கூடிய தண்ணீர்த் தட்டுப்பாடு குறித்துப் பேசுகிற படமாக அமைந்துள்ளது. பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகைகள் ஜெயப்ரதா, ரேவதி, ரேகா, அனுஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரங்களில் பார்த்திபன், நாசர், எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அதில் ஜெயப்ரதா, பார்த்திபன், ரேவதி, ரேகா, அனுஹாசன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய பார்த்திபன், “இந்த நிகழ்ச்சி நடைபெறும் இடம் க்ரீன் பார்க், பசுமைப் பூங்கா. இந்த இடம் மட்டுமே பசுமைப் பூங்காவாக இல்லாமல், இந்த நாடே பசுமைப் பூங்காவாக மாற வேண்டுமெனில் முக்கியமாகத் தண்ணீர் தேவை. ஆன்மிக அரசியலைப் பற்றி சமீபத்தில் நீங்கள் அறிந்திருப்பீர்கள், இது நீர்மிக அரசியல் பேசும் படம். இந்த நாட்டில் தண்ணீர் பிரச்னை தீர வேண்டுமெனில் நதிகளை இணைக்க வேண்டுமென எல்லோரும் சொல்கிறார்கள். அதற்கு மனித மனங்களை இணைக்க வேண்டும். அப்படி இதயங்களை இணைக்கும் ஒரு படமாக நிச்சயமாக ‘கேணி’ இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “நீர் பிரச்னை என்பது தமிழர்கள் சம்பந்தப்பட்டதோ, மலையாளிகள் சம்பந்தப்பட்டதோ இல்லை. அது மனிதர்கள் சம்பந்தப்பட்டது. தண்ணீரை வைத்துக்கொண்டு கேரளாவோ, தமிழ்நாடோ அரசியல் செய்யலாம். ஆனால், கலைஞர்கள் அந்த அரசியலுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள். ஏனென்றால், ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எங்களுக்குக் கவலையில்லை. பிரச்னைகளைப் பேசிக்கொண்டேதான் இருப்போம்” என்று கூறியுள்ளார்.

“தமிழகத்தை விட கேரளாவில் கலைஞர்களுக்கான சுதந்திரம் என்பது அதிகமாக இருக்கிறது. அது பாராட்டுக்குரியது. அங்கே திருவனந்தபுரம் ராஜாவைக் கூட விமர்சனம் செய்யலாம். இங்கே யாரையுமே விமர்சனம் செய்ய முடிவதில்லை. அதனால்தான் நல்ல விஷயத்தைச் சொல்லும் இந்த ‘கேணி’ படத்திற்குள் என்னையும் இணைத்துக்கொண்டேன். எனக்கு பெரியார் விருது கொடுத்தபோது சில விஷயங்கள் பேசினேன். அதற்குக் கூட சமூக வலைதளங்களில் என்னை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தளவுக்குச் சகிப்புத் தன்மை இல்லாமல் போய்விட்டது. அந்த வகையில் பார்க்கப் போனால் கருத்து சுதந்திரத்தில் தமிழகத்தைவிட கேரளம் சிறந்து விளங்குகிறது. இந்தப் படம் நல்ல தீர்வை நோக்கி அழைத்துச் செல்லும் என்பது பாராட்டுக்குரியது” என்று தன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார் பார்த்திபன்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

ஞாயிறு 21 ஜன 2018