மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 ஜன 2018

ஏமாற்றமளித்த இந்திய வீரர்கள்!

ஏமாற்றமளித்த இந்திய வீரர்கள்!

ஆஸ்திரேலிய ஓப்பன் தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், பூரவ் ராஜா ஜோடி தோல்வியைத் தழுவியது.

ஆஸ்திரேலியாவின் மெல்பொர்ன் நகரில் நடைபெற்றுவரும் ஆஸ்திரேலிய ஓப்பன் தொடரில் இன்று (ஜனவரி 21) நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவு மூன்றாவது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், பூரவ் ராஜா ஜோடி கொலம்பியா நாட்டின் ஜான் செபாஸ்டின், ராபர்ட் பாராக் ஜோடியை எதிர்கொண்டது.

அதில் தொடர்ந்து சொதப்பிய இந்திய வீரர்கள் தொடக்கம் முதலே புள்ளிகளைப் பெற திணறினர். எனவே 6-1, 6-2 என்ற நேர் செட்களில் கொலம்பியா ஜோடி எளிதில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் கொலம்பியா ஜோடி நான்காவது சுற்றுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்தியா சார்பில் விளையாடிவந்த இருவரும் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் ரோஹன் போபன்னா மட்டும் தொடரில் விளையாடி வருகிறார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

ஞாயிறு 21 ஜன 2018