மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 ஜன 2018

கிச்சன் கீர்த்தனா: புளியிட்ட கீரை!

கிச்சன் கீர்த்தனா: புளியிட்ட கீரை!

இன்னிலேர்ந்து காய்கறி விலையை மூணு மடங்கு ஏத்தியிருப்பாங்க. காரணம் கேட்டா, ‘பஸ் கட்டணம் ஏறிடுச்சு’னு சொல்வாங்க. மொத்தமா காய்கறி வாங்க மார்கெட்டுக்குப் போகலாம்னா, அங்கேயும் பஸ் கட்டணம்தான் குறுக்கே வந்து நிக்குது.

சரி, என்ன பண்றதுன்னு யோசிச்சப்பதான் வாங்கி வெச்ச கீரையோட ஞாபகம் வந்தது. வாங்க... அந்த கீரையையும் கொஞ்சம் புளியையும் வெச்சு ஒரு டிஷ் செய்யலாம்.

தேவையானவை:

அரைக்கீரை அல்லது பசலைக்கீரை - ஒரு கட்டு, புளி - எலுமிச்சை அளவு, வெந்தயம் - 1 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் – 2, நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி, கடுகு - 1 தேக்கரண்டி.

செய்முறை:

புளியை 2 டம்ளர் அளவுக்கு நன்றாகக் கரைத்து வைக்கவும். மண் போகக் கீரையை அலசி வைக்கவும். மிதமான சூட்டில் ஒரு வாணலியில் வெந்தயத்தையும் காய்ந்த மிளகாயையும் சிவக்க வறுத்துத் தனியே வைக்கவும். பிறகு, ஒரு பாத்திரத்தில் கீரையைப் போட்டுக் கரைத்துள்ள புளிக்கரைசலை விடவும். சிறிதளவு உப்பு சேர்க்கவும். வறுத்து வைத்துள்ள வெந்தயம், காய்ந்த மிளகாயைக் கீரை, புளிக்கலவையுடன் சேர்த்துக் கொதிக்க விடவும். கீரை வெந்ததும் சிறிது நேரம் ஆறவிட்டு பிறகு மிக்ஸியில் அரைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய்விட்டுக் காய்ந்ததும் கடுகு போட்டுத் தாளிக்க வேண்டும். அரைத்தப் புளியிட்ட கீரையுடன் தாளித்தவற்றைச் சேர்க்கவும்.

செய்வதற்கு எளிதான இந்த புளியிட்ட கீரையைப் பத்து நிமிடங்களில் தயாரித்து விடலாம். சாதத்துக்கு குழம்புக்குப் பதிலாகப் புளியிட்ட கீரையைப் பயன்படுத்தலாம்.

கீர்த்தனா சிந்தனைகள்:

இடஒதுக்கீட்டை பெற்றுத்தருவதில் ‘கர்ச்சீப்’பின் பங்கே அதிகம்.

வாயால் பஸ் ஓட்டுவதற்கு எந்தக் கட்டண உயர்வும் கிடையாது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

ஞாயிறு 21 ஜன 2018