மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 ஜன 2018

கட்டண உயர்வு மறுபரிசீலனை இல்லை: அமைச்சர்

கட்டண உயர்வு மறுபரிசீலனை இல்லை: அமைச்சர்

‘பேருந்து கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய முடியாது’ என்று தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். நிதி நெருக்கடியைச் சமாளிக்கவே இந்தக் கட்டண உயர்வு என்றும், தமிழக மக்கள் இதை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணக் கட்டணம் உயர்த்தப்படுவதாக ஜனவரி 19 அன்று அறிவித்து, நேற்று (ஜனவரி 20) முதல் அமலுக்கும் வந்துவிட்டது. இதைப் பெரும்பாலான கட்சிகள் கண்டித்து, தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. உடனடியாக இந்தக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டுமென்றும் கூறியுள்ளன.

இதுகுறித்து, கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று பேட்டியளித்தார். அப்போது, தவிர்க்க முடியாத நிலையில்தான் பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளதாகத் தெரிவித்த அவர், இது தொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையைப் படித்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:

“2011ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஏழு ஆண்டுகள் கழித்து பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலையேற்றம், ஊழியர்களின் ஊதிய உயர்வு, உதிரி பாகங்களின் விலை உயர்வு போன்ற நெருக்கடிகளால் கட்டணத்தை உயர்த்த வேண்டிய சூழலில் போக்குவரத்துக் கழக நிர்வாகம் உள்ளது.

தமிழகத்தில் 22 ஆயிரத்து 500 பஸ்கள் இயக்கப்படுகின்றன. மலைப் பகுதிகளில் இயக்கப்படும் 12 ஆயிரம் பஸ்களில் பயணிகள் குறைவு. இதனால் அங்கு நஷ்டம் ஏற்படுகிறது. அதேவேளையில், மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் பஸ் கட்டணம் மிகவும் குறைவு. தற்போது கட்டண உயர்வுக்குப் பின்னரும் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.900 கோடி நிதிப் பற்றாக்குறை ஏற்படும்.

தற்போதைய ஊதிய உயர்வுக்குப் பின்னர், போக்குவரத்துக் கழகங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.12 கோடி நஷ்டம் ஏற்படுகிறது. 60 ஆயிரம் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.2,500 கோடி நிலுவைத் தொகை கடந்த நவம்பர் மாத இறுதிக்குள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. மக்கள் நலன் காக்கும் அதிமுக அரசின் இந்தக் கட்டண உயர்வைப் பொதுமக்கள் பொறுத்துக்கொண்டு ஆதரிக்க வேண்டும். இன்றைய கணக்குப்படி பார்த்தால் ரூ.1 வரவு என்றால் ரூ.1.42 செலவாகிறது.

ஆந்திராவில் புறநகர் பேருந்துகளில் ஒரு கிலோ மீட்டருக்கு 63.7 பைசாவும், கேரளாவில் 65 பைசாவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 2014 – 15ஆம் ஆண்டிலிருந்து அமலில் உள்ளது. வரும் ஆண்டுகளில் பேருந்து கட்டணத்தை உயர்த்த அவர்கள் தயாராகி வருகிறார்கள். ஆனால், தமிழகத்தில் 2000ஆம் ஆண்டுக்குப் பின்னர் இரண்டு முறைதான் உயர்த்தப்பட்டுள்ளது. ஆந்திராவில் 2000ஆம் ஆண்டுக்குப் பின்னர் 12 முறையும், கேரளாவில் 8 முறையும் கட்டணம் அதிகமாகியுள்ளது. எனவே, உயர்த்தப்பட்ட கட்டண உயர்வைத் திரும்பப் பெற ல்லை” என்று கூறினார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

ஞாயிறு 21 ஜன 2018