மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 ஜன 2018

மெரினாவில் ஜல்லிக்கட்டு நினைவுச் சின்னம்!

மெரினாவில் ஜல்லிக்கட்டு நினைவுச் சின்னம்!

தமிழர்களின் ஜல்லிக்கட்டுப் போராட்ட வெற்றியை நினைவுகூரும் வகையில், ‘மெரினாவில் தமிழக அரசு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும்’ என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கலந்துகொண்ட போராட்டம் பிரமாண்டமான அளவில் நடைபெற்றது. கடந்த ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி தொடங்கி ஜனவரி 23ஆம் தேதி வரை நடைபெற்ற இந்தப் போராட்டம் தமிழகம் முழுவதும் பரவியது.

சென்னை மெரினாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடத்திய போராட்டம், தமிழர்களின் ஒற்றுமையையும் பெருமையையும் எடுத்துக்காட்டும் அளவுக்கு உலகையே வியக்கச் செய்தது.

“கடந்த ஆண்டு (2017) ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் வெற்றி பெற்றதால், இந்த ஆண்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. இந்தப் புரட்சியை நினைவுகூரும் வகையில், சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு நினைவுச் சின்னம் அமைக்கத் தமிழக முதலமைச்சர் முன்வர வேண்டும். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், இளைஞர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை முழுமையாக வாபஸ் பெற வேண்டும்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

ஞாயிறு 21 ஜன 2018