மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 ஜன 2018

மின்னம்பலம் வாசகருக்கு ஸ்மார்ட்போன் பரிசு!

மின்னம்பலம் வாசகருக்கு ஸ்மார்ட்போன் பரிசு!

சென்னைப் புத்தகக் காட்சிக்கு வருகை தரும் மின்னம்பலம் வாசகர்களை ஊக்கப்படுத்தும்விதமாக ஸ்மார்ட்போன் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

தமிழின் முதல் மொபைல் பத்திரிகையான நமது மின்னம்பலத்தின் புத்தகங்கள் சென்னைப் புத்தகக் காட்சியின் அரங்கு எண் 379இல் இடம்பெற்றுள்ளன. நாளுக்கு நாள் நமது அரங்கை நாடிவரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. வாசகர்களை ஊக்குவிக்கும்விதமாக நடத்தப்படும் ஸ்மார்ட்போன் பரிசு திட்டத்தில் பங்குபெற வாசகர்கள் மின்னம்பலம் அரங்குக்கு வருகை தருவதே போதுமானது இருக்கிறது. இருப்பினும் வாசகர்களின் தேடலில் மின்னம்பலம் பதிப்பகத்தின் வெளியீட்டு நூல்களும் இடம்பிடித்திருக்கின்றன.

ஒவ்வொரு நாளும் நடைபெறும் குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு ஸ்மார்ட்போன் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. நேற்று (ஜனவரி 20) நடைபெற்ற குலுக்கலில் திரு.எம்.விஜயகுமார் MI 5A மாடல் ஸ்மார்ட்போனைத் தட்டிச்சென்றார். இவர் சென்னை, மாங்காட்டில் வசிக்கிறார். சென்னை, ராயப்பேட்டை ‘ஓம் இம்பிரஷன் பிரஸ்’ நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்தப் பரிசை திரைப்பட இயக்குநர் கருணாகர பல்லவா மற்றும் நமது மின்னம்பலம் நிறுவனத்தின் மெய்ப்பு நோக்காளர் வேல் முருகன் ஆகியோர் இணைந்து வழங்கிச் சிறப்பித்தனர். சென்னை, மேடவாக்கம் ‘SHRIDI SHELTERS’ நிறுவன உரிமையாளர் திரு.சரவணன் அவர்கள் இந்த ஸ்மார்ட்போன் பரிசை வழங்கினார்.

இன்றைய குலுக்கலில் வெல்வது நீங்களாகவும் இருக்கலாம்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

ஞாயிறு 21 ஜன 2018