மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 ஜன 2018

ஆண்டு விழா கொண்டாட்டத்தில் கடலோரக் காவல்படை!

ஆண்டு விழா கொண்டாட்டத்தில் கடலோரக் காவல்படை!

இந்தியக் கடலோரக் காவல்படையின் 41ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் மீனவர்களுக்கிடையேயான நல்லுறவு மற்றும் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது.

இந்தியக் கடலோரக் காவல்படையின் 41ஆவது ஆண்டு தினம், வரும் பிப்ரவரி 1ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு மண்டபத்தில் உள்ள கடலோரக் காவல்படை மையத்தில் பல்வேறு நிகழ்ச்சிள் நடக்கவுள்ளன. இதன் தொடக்க நிகழ்ச்சியாக, மீனவர்களிடையேயான நல்லுறவு மற்றும் ஒருங்கிணைப்புக் கூட்டம் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மண்டபம் கடலோரக் காவல்படையின் கமாண்டர் (பொறுப்பு) சங்கர் ராஜீவ் தலைமை வகித்தார். கூட்டத்தில் உரையாற்றிய ஹோவர் கிராப்ட் கப்பல் கமாண்டர் விஜய், “இந்தியக் கடலோரக் காவல்படை, மீனவர்களுக்கு எந்நேரமும் உதவி செய்யக் காத்திருக்கிறது. மீனவர்கள், கடலோரக் காவல்படையினரை நண்பர்களாகவே பார்க்க வேண்டும். மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும்போது, அதற்கான அனுமதியைப் பெற்றுச் செல்வதுடன், தங்களது அடையாள அட்டையையும் அவசியம் எடுத்துச் செல்ல வேண்டும். அவர்கள் ஆபத்து நேரத்தில் உடனடியாக கடலோரக் காவல்படையினரைத் தொடர்பு கொள்ளலாம்” என்று கூறினார்.

தொடர்ந்து, கடலுக்குச் செல்லும் மீனவர்கள் கடலில் தவறிவிழுந்தால் அவர்களை மீட்டு முதலுதவி செய்வது குறித்தும், மீனவர்களிடம் வழங்கப்பட்டுள்ள லைஃப் ஜாக்கெட் உள்ளிட்ட ஆபத்து கால கருவிகளை இயக்குவது குறித்தம் செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

ஞாயிறு 21 ஜன 2018