மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 ஜன 2018

கிராபிக்ஸால் பிரச்னையை மறைக்கும் ‘பத்மாவத்’

கிராபிக்ஸால் பிரச்னையை மறைக்கும் ‘பத்மாவத்’

பத்மாவத் படத்துக்கு நான்கு மாநிலங்களில் விதிக்கப்பட்டிருந்த தடையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தபின் நிம்மதி பெருமூச்சுவிடும் படக்குழுவினர், தற்போது படத்தில் சில மாற்றங்களைச் செய்துவருகின்றனர்.

‘பத்மாவத்’ தொடர்பாக எழுந்த பிரச்னைகளுக்கான காரணமாகச் சொல்லப்பட்டவைகளில் முக்கியமானது, படத்தில் ராஜஸ்தானின் பாரம்பர்ய கூமார் நடனத்தில் தீபிகா படுகோன் கவர்ச்சியாகத் தோன்றுகிறார் என்பதே.

இந்த நடனக் காட்சிகள் குறித்து ராஜ்புத்ர கிர்னி சேனா நிர்வாகி கூறும்போது, “பத்மாவத் படத்தில் ராணி பத்மினியாக நடித்துள்ள தீபிகா, கூமார் எனும் நடனத்தை ஆடுவதுபோல் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இது ராஜஸ்தானில் திருமணங்களில் ஆடப்படும் நடனம் ஆகும். இந்த நடனத்தை அரசகுல பெண்கள் ஆட மாட்டார்கள். ஆனால், ராணி பத்மினி கூமார் நடனம் ஆடுவது போல் காட்டப்படுவது தவறு. மேலும், உடலை மறைத்து ஆட வேண்டிய நடனத்தில் தீபிகா இடுப்பு தெரியும்படி ஆடியிருக்கிறார். இது எங்கள் மனதைப் புண்படுத்துவதுபோல் இருக்கிறது. எப்படியாவது ராணி பத்மினியை அடையத் துடிக்கும் வில்லனான அலாவுதீன் கில்ஜி தனது கனவில் தீபிகாவுடன் நெருக்கமாக ஆடிப்பாடும்படியான பாடல் காட்சி இடம்பெற்றுள்ளது. கருத்து சுதந்திரம் எனும் பெயரில் இதுபோன்ற தவறான காட்சிகளை மக்கள் மனதில் விதைக்கப் பார்க்கிறார்கள்” என்று தெரிவித்திருந்தார்.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

ஞாயிறு 21 ஜன 2018