மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 ஜன 2018

பட்ஜெட் அல்வா கிளறிய அருண் ஜேட்லி

பட்ஜெட் அல்வா கிளறிய அருண் ஜேட்லி

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளதால் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நேற்று (ஜனவரி 20) பட்ஜெட் அல்வா தயாரித்தார்.

நாடாளுமன்றத்தில் வரும் ஜனவரி 29ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் நேற்று (ஜனவரி 20) மத்திய நிதியமைச்சகம் அமைந்துள்ள சவுத் பிளாக்கில் வழக்கமான அல்வா செய்யும் நடைமுறை நடந்தது. இதில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் மத்திய நிதியமைச்சக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிதியமைச்சர் அருண் ஜேட்லி அல்வா தயாரித்து அனைவருக்கும் வழங்கினார்.

பிப்ரவரி ஒன்றாம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பட்ஜெட் அறிக்கைகள் அச்சிடும் பணி நேற்று தொடங்கியது. ஒவ்வோர் ஆண்டும் பட்ஜெட் அறிக்கைகள் அச்சிட தொடங்கும் முன்பு பட்ஜெட் அல்வா தயாரிப்பது வழக்கமாகும். அதன்படியே நேற்றும் நடைபெற்றது. இதில் பங்கேற்று அல்வா சாப்பிட்ட பணியாளர்கள் பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை வெளி உலகத்துடனான தொடர்பை துண்டித்துக்கொள்ள வேண்டும். இந்த நடைமுறையிலிருந்து மத்திய நிதியமைச்சர் மற்றும் ஒரு சில மூத்த அதிகாரிகளுக்கு மட்டுமே இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. பட்ஜெட் ரகசியங்கள் வெளியாகக் கூடாது என்பதற்காக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

ஞாயிறு 21 ஜன 2018