மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 ஜன 2018

வாட்ஸப் வடிவேலு

வாட்ஸப் வடிவேலு

பஸ் கட்டணம், பெட்ரோல் - டீசல் விலையைவிட வேகமா போயிட்டிருக்கு நாடு. இன்னொருபக்கம் ஆண்டாள் பிரச்னையும் வேகமாகிட்டு வருது.

‘இந்துடா’னு நூறு பேரு பாஜகவுல சேர்ந்திருக்கான்.

‘திராவிடன்டா’னு நூறு பேரு திமுகல சேர்ந்திருக்கான்.

‘தமிழன்டா’னு நூறு பேரு நாம் தமிழர்ல சேர்ந்திருக்கான்,

‘செம #பிகருடா’னு மூவாயிரம் பேரு நித்தியானந்தா ஆசிரமத்துல சேர்ந்திருக்கான்.

ஏதாச்சும் ஃபார்வேர்டு மெசேஜ் அனுப்பி, ஏதாச்சும் கம்பெனிகளோட விற்பனையைக் குறைக்க மொக்கை முயற்சியெல்லாம் செஞ்சுக்கிட்டு இருக்காங்க. அதுல ஒண்ணு...

அதிர்ச்சி தகவல்

Tamilnadu காவல் துறை, ‘யாரும் மாஸா (Maaza) குளிர்பானத்தை வாங்க வேண்டாம்’ என்று தெரிவித்துள்ளது. ஏனென்றால், அந்த கம்பெனியில் வேலை செய்யும் ஒருவரின் ரத்தம் ஒரு பாட்டிலில் கலந்துவிட்டது. முக்கியமானது என்னவென்றால் அவர் எய்ட்ஸ் (HIV-AIDS) நோய் பாதிக்கப்பட்டவர். முடிந்தவரை ஒரு மாதம் வரை யாரும் வாங்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்கள். இதே செய்தியை ஆங்கில செய்தி தொலைக்காட்சியான NDTVயும் நேற்று ஒளிப்பரப்பியது. ஆகையால் நண்பர்களே முடிந்த வரை உங்களுடைய அனைத்த Whatsapp நண்பர்களுக்கும் பகிருங்கள். நன்றி.

அதுல தமிழ்நாடு என்கறது மட்டும் இங்கிலீஷ்ல இருக்கப்பவே டவுட்டுதான்.

இதேபோல, ‘பெப்சி அருந்தாதீர்’ என்கிற மெசேஜெல்லாம் ஏற்கெனவே வந்தாச்சு.

தமிழக அரசு அறிவிப்பு

சென்னை மாநகர பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5, அதிகபட்ச கட்டணம் ரூ.23.

நகர பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5, அதிகபட்ச கட்டணம் ரூ.19.

* வோல்வோ பேருந்த கட்டணம் 30 கி.மீக்கு ரூ.33லிருந்து 51 ஆக உயர்வு.

*வோல்வோ பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.25, அதிகபட்ச கட்டணம் ரூ.150.

* மாற்றியமைக்கப்பட்டுள்ள பேருந்து கட்டணம் தனியார் பேருந்துகளுக்கும் பொருந்தும்.

* மலைப்பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகளுக்கு அடிப்படை பயண கட்டணத்துடன் 20% கூடுதலாக வசூலிக்கப்படும்.

* மாநகர, நகரப் பேருந்து கட்டணம் குறைந்தபட்சம் ரூ.0லிருந்து ரூ.5 ஆக உயர்த்தப்பட்டது.

ஆக, அவங்க போராட்டம் பண்ணினதுக்கு நாமதான் காவு வாங்கப்படுறோம்.

ஒரு ரெண்டு நாள் கத்தவிட்டு லைட்டா குறைப்பாங்க. ஆகா, ஓஹோன்னு கொண்டாடுவோம். அதாவது 50% ஏத்தணும்னா முன்னாடியே 70% உயர்வுன்னு காட்டி, போராட்டம் பண்ண வெச்சு, அப்புறம் 50% ஆக்குற காய்கறி பேரம்தான்.

அது சரி, டாஸ்மாக் விலை ஏற்றத்துக்கோ பெட்ரோல் - டீசல் இந்த ஆறு மாச விலை உயர்வுக்கோ, சினிமா கட்டணம் உயர்வுக்... இதுக்கெல்லாம் கேட்டோமா என்ன... போங்க பாஸ்!

“தம்பி ஒரு டீ குடுப்பா... என்னது 12 ரூபாயா? டீயே வேணாம், நான் தண்ணியவே குடிச்சிக்கிறேன்.”

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

ஞாயிறு 21 ஜன 2018