ஜிஎஸ்டி: வரி குறைப்புக்கு வரவேற்பு!


சரக்கு மற்றும் சேவை வரியின்கீழ் பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கான வரி குறைக்கப்பட்டிருப்பதை அத்துறையினர் வரவேற்றுள்ளனர்.
வரி குறைப்பை வலியுறுத்தி எழுந்த கோரிக்கைகள் மற்றும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருப்பதைக் கருத்தில்கொண்டு ஜனவரி 18ஆம் தேதி நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கலந்தாய்வுக் கூட்டத்தில் 29 பொருள்கள் மற்றும் 54 சேவைகளுக்கான வரிகள் அதிரடியாகக் குறைக்கப்பட்டன. அதில், நடுத்தர மற்றும் பெரிய வகை பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான வரியும் 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது. அதேபோல சிறிய கார்களுக்கான வரியும் 28 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டதோடு, இவ்வாகனங்களுக்கான கூடுதல் செஸ் வரியும் ரத்து செய்யப்பட்டது.