இன்டர்நெட்: விமானங்களில் அனுமதி!

விமானங்களில் பறக்கும்போது பயணிகள் தொலைபேசியில் பேசவும், இணையச் சேவை பயன்படுத்தவும் அனுமதிக்கலாம் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிரய்) அறிவித்துள்ளது.
இந்திய வான்வெளியில் பறக்கும் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் வாய்ஸ் கால், டேட்டா மற்றும் வீடியோ சேவைகளை அனுமதிப்பது குறித்து மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் கருத்துகளை, மத்திய டெலிகாம் துறை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி கோரியிருந்தது. இதுகுறித்து, தற்போது டிரய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விமானங்களில் வேகமான மற்றும் தடையற்ற இணையச சேவை குறித்து தொடர்ந்து பல கோரிக்கைகள் வந்தன. IFC (விமானத்தினுள் இன்டர்நெட் கனெக்டிவிட்டி) மற்றும் MCA (வானில் மொபைல் தகவல் பரிமாற்றம்) சேவைகளை இந்திய வான்வெளியில் 300 மீட்டர் உயரம் வரை அனுமதிக்கலாம்.