மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 ஜன 2018

பியூட்டி ப்ரியா: பழகிய பொருளும் அழகிய முகமும்!

பியூட்டி ப்ரியா: பழகிய பொருளும் அழகிய முகமும்!

பரம்பரை, முக அமைப்பு மற்றும் ஊட்டச்சத்தின்மை போன்ற காரணங்களால் சிலருக்குக் கன்னங்கள் ஒட்டிப்போயிருக்கும். அவர்கள் தினமும் மூன்று முறை தலா 30 நிமிடங்களுக்குப் பலூனை ஊதி ஊதிப் பயிற்சி செய்வது கன்னங்களுக்கான சிறந்த பயிற்சி. அலுவலகத்தில் வேலை செய்யும்போது பலூன் இல்லாமலும் பலூன் ஊதுவது போல கன்னங்களை உப்ப வைத்துப் பயிற்சி செய்யலாம்.

கன்னங்கள் புஷ்டியாக வெந்தயம் சிறந்த மருந்து. தேவையான அளவு வெந்தயத்தை ஊறவைத்து அரைத்துக் கன்னங்களில் தடவி, 30 நிமிடங்கள் தலையணை இல்லாமல் படுக்கவும். பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும். இது முகத்துக்குச் சிறந்த மாய்ஸ்ச்சரைஸரும்கூட.

கிளிசரின் (மெடிக்கல் கடைகளில் கிடைக்கும்) மற்றும் ரோஸ் வாட்டர் இரண்டையும் சமமாக எடுத்துக் கலந்து, பஞ்சில் தொட்டு கழுத்து மற்றும் முகத்தில் தடவி, தலையணை இல்லாமல் 15 நிமிடங்கள் கண்கள் மூடிப் படுத்திருக்கவும். பின்னர் குளிர்ந்த நீரால் கழுவவும். இதனால் சருமத்தின் அடிப்பகுதி பலப்படுத்தப்பட்டு மேற்பகுதியில் பளபளப்பு அதிகரிக்கும்.

வாரம் இரண்டு அல்லது மூன்று முறை 8 அல்லது 10 பாதாம், 10 கிராம் கசகசா இரண்டையும் வெந்நீரில் ஊறவைத்து, மிக்ஸியில் அரைத்து பேஸ்ட்டாக்கி முகத்தில் தடவி, 30 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். தொடர்ந்து செய்து வந்தால் தளதள கன்னங்கள் மற்றும் பளபள சருமம் நிச்சயம்.

சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும் எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயிலை வாங்கிக்கொள்ளவும். தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன், தேவையான ஆலிவ் ஆயிலை முகத்தில் தடவி, 10 நிமிடங்களுக்கு மேல்நோக்கி மசாஜ் செய்து வந்தால், நாளடைவில் கன்னங்கள் புஷ்டியாவதுடன், தொய்வான சருமமும் இறுக்கமாகும்.

இதேபோல ஷியா பட்டர் (சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும்) அல்லது உப்பில்லாத வெண்ணெயைக் குளிக்கும் முன் முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் மசாஜ் செய்து குளிக்கலாம். இது கன்னங்களில் உள்ள சதைப்பகுதியைத் திடமாக்குவது மட்டுமில்லாமல், நல்ல பளபளப்பும் கொடுக்கும்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

ஞாயிறு 21 ஜன 2018