மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 ஜன 2018

வஞ்சிக்கும் மத்திய, மாநில அரசுகள்: ஜி.கே.மணி

வஞ்சிக்கும் மத்திய, மாநில அரசுகள்: ஜி.கே.மணி

விவசாயிகளின் பிரச்சனைகள் குறித்து ஆலோசனை செய்ய, இன்று (ஜனவரி 20) சென்னையில் உழவர் பேரியக்கம் சார்பாக கூட்டம் நடத்தப்படவுள்ளது. இதுகுறித்துப் பேசிய பாமக தலைவர் ஜி.கே.மணி, தமிழக விவசாயிகள் நலனைப் பொறுத்தவரை மத்திய மற்றும் மாநில அரசுகள் இரண்டுமே வஞ்சனை செய்கின்றன என்று கூறியுள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளுக்கான பாமக பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பாமக தலைவர் ஜி.கே.மணி கலந்துகொண்டார். அதன்பின், அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவர்களது கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது, விவசாயத்திற்கான ஈடுபொருட்களை மானிய விலையில் வழங்காமல் அரசு ஏமாற்றி வருவதாகக் குற்றம்சாட்டினார்.

“நடுவர் மன்ற தீர்ப்பின்படி கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிட, மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு தமிழக விவசாயிகள் நலனில் அக்கறை இல்லை. விவசாயிகளை வஞ்சிக்கும் அரசுகளாகவே இருக்கின்றன. தமிழகத்திலுள்ள விவசாயிகளுக்கு முறையாக பயிர் காப்பீடு தொகை வழங்கப்படவில்லை. காப்பீட்டுத் திட்டத்தில் நிலவும் முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவர, வேளாண் காப்பீட்டுக் கழகத்தை அரசே தொடங்க வேண்டும்.

அதேபோல விவசாயத்திற்கான ஈடுபொருட்களும் மானிய விலையில் தரப்படுவதில்லை. விவசாயிகள் தற்கொலை செய்வது தமிழகத்தில் தற்போது அதிகமாகியுள்ளது. இதனால், விவசாயிகள் பிரச்சனை குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 20 ஜன 2018