மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 ஜன 2018

இந்த ஆட்சி கமிஷனுக்கானது!

இந்த ஆட்சி கமிஷனுக்கானது!

அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துக் கட்டண உயர்வு, ஆம்னி பேருந்துகளுக்கும் தனியார் பேருந்துகளுக்கும் உதவும் முயற்சியா என்று கேள்வி எழுப்பியுள்ளார் திமுகவின் செயல் தலைவரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின். மக்கள் படும் வேதனையைக் கைகொட்டி ரசிக்கும் சேடிஸ்ட் மனப்பான்மையுடன் அதிமுக அரசு உள்ளது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

அரசு போக்குவரத்துக் கழக பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படுவதாக, நேற்று (ஜனவரி 19) தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இன்று முதல் இந்தக் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. இந்தக் கட்டண உயர்வு வேதனையளிப்பதாகக் கூறி அதற்குக் கண்டனம் தெரிவித்திருக்கும் மு.க.ஸ்டாலின் விடுத்திருக்கும் அறிக்கை வருமாறு:

“கடந்த 2006 – 2011 திமுக ஆட்சிக்காலத்தில், டீசல் விலை உயர்வு அதிகமாக இருந்தபோதும் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படவில்லை. 2015 முதல் சர்வதேசச் சந்தையில் டீசல் விலை குறைந்துவருகின்ற நிலையில், இப்படியொரு விஷம் போன்ற கட்டண உயர்வை அறிவித்திருப்பதை நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது. தினமும் விலையேறும் பங்குச் சந்தை போல் மத்திய பாஜக அரசு அறிமுகம் செய்த பெட்ரோல்-டீசல் விலையேற்றத்தை எதிர்க்கத் தைரியமில்லாத, பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டி வரிவிதிப்பின் கீழ் கொண்டுவரக் கோரிக்கை வைக்கக் கொஞ்சமும் திராணியில்லாத அதிமுக அரசும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் மக்களின் தலையில் தாராளமாகப் பேருந்துக் கட்டணப் பேரிடியை இறக்கியிருப்பது இந்த ஆட்சி மக்களுக்காக நடப்பதல்ல, கமிஷனுக்காக மட்டுமே நடக்கும் ஆட்சி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து அறிவித்துக்கொண்டிருக்கிறது.

கடந்த ஐந்து வருடங்களில் அறிவித்த 12 ஆயிரம் பேருந்துகளில் 7500 பேருந்துகள் இன்னும் வாங்கப்படவே இல்லை. பழைய பேருந்துகளும் பராமரிக்கப்படவில்லை. மாறாக, ஒரு நாளைக்குப் பத்துக் கோடி ரூபாய் பேருந்துக் கட்டண உயர்வை மக்கள் தலை மீது ஏற்றி வைத்து அவர்கள் படும் வேதனையைக் கைகொட்டி ரசிக்கும் சேடிஸ்ட் மனப்பான்மை கொண்ட அரசாக அதிமுக அரசு இருக்கிறது. போக்குவரத்து ஊழியர்களிடம் பிடித்த பணத்தையும் எடுத்து செலவு செய்துவிட்டுப் போக்குவரத்துக் கழகங்களை நஷ்டத்தில் மூழ்கடித்துவிட்ட அதிமுக அரசு தன் நிர்வாகச் சீர்கேட்டை மறைக்க இப்படி மக்களின் தலையில் கட்டண உயர்வை ஏற்றிவைத்துள்ளது. இது ஆம்னி பேருந்துகளுக்கும் தனியார் பேருந்துகளுக்கும் உதவும் முயற்சியா என்ற கேள்வியும் எழுகிறது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

சனி 20 ஜன 2018