மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 ஜன 2018

திமுகதான் காரணம்!

திமுகதான் காரணம்!

திமுக ஆட்சிகாலத்தில் வைக்கப்பட்ட நிலுவைத் தொகையைப் போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கவே பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் பேருந்துகளின் கட்டணம் அதிகரிக்கப்படுவதாக தமிழக அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, நகர் மற்றும் மாநகரப் பகுதிகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.3-லிருந்து 5 ஆகவும், அதிகபட்சம் 12 ரூபாயிலிருந்து 19 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து வகையான பேருந்துகளின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

இன்று முதல் அமலுக்கு வந்துள்ள இந்தக் கட்டண உயர்வால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதற்கு விளக்கம் அளித்துள்ள தமிழக அரசு, கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகும், தமிழகத்தில் அண்டை மாநிலங்களை விடக் குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது என்று கூறியது.

இந்நிலையில் கட்டண உயர்வுக்குக் காரணம் திமுக ஆட்சிதான் காரணம் என்று அமைச்சர் வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார். கோவை மாவட்டம் வையம்பாளையத்தில் இன்று (ஜனவரி 20) செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திமுக ஆட்சிக் காலத்தில் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களின் நிதி வேறொரு திட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்டதால், இதுவரை ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை வழங்க முடியாத நிலை உள்ளது.

எனவே திமுக ஆட்சிக் காலத்தில் கொடுக்கப்படாமல் வைத்த நிலுவைத் தொகையை, போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கவே இந்தப் பேருந்துக் கட்டண உயர்வைக் கொண்டு வந்துள்ளோம்" என்று கூறினார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 20 ஜன 2018