மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: ஆண்கள்தான் உண்மையில் பலவீனமானவர்கள்!

சிறப்புக் கட்டுரை: ஆண்கள்தான் உண்மையில் பலவீனமானவர்கள்!

கடந்த 250 வருடங்களாக பஞ்சம், தொற்றுநோய்கள், கடினமான நேரங்களில் தொடர்ச்சியாக பெண்கள், ஆண்களைவிட அதிக காலம் தாக்குப்பிடித்துவருகிறார்கள் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பொதுவாகவே ஆண்களைவிடப் பெண்களின் ஆயுட்காலம் அதிகம் என்பது நீண்ட காலமாகவே நாம் அறிந்த விஷயம்தான்; மேலும் 250 ஆண்டுகால வரலாற்றுப் பதிவுகளை ஆராய்ந்ததில், டிரினிடாட்டில் தோட்ட அடிமைகளாக இருந்தது, ஸ்வீடனில் ஏற்பட்ட பஞ்சம், ஐஸ்லாந்தில் பல்வேறு முறை பரவிய தட்டம்மை நோய்கள் ஆகிய சந்தர்ப்பங்களில் பெண்கள், ஆண்களைவிட அதிக காலம் வாழ்ந்துள்ளனர் என்பது தெரியவருகிறது.

இரண்டு பாலினங்களிலும் இறப்பு எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்த காலத்திலும்கூட, பெண்களின் இறப்பு ஆண்களைவிட சராசரியாக ஆறு மாதங்களிலிருந்து நான்கு ஆண்டுகள் வரையிலும் குறைவாகவே இருந்தது என வட கரோலினாவில் உள்ள ட்யூக் பல்கலைக்கழக ஆய்வறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

ஆய்வின் முடிவுகள்

20 வருடம் அல்லது அதற்கும் கீழ், இரு பாலினத்தவரிடையேயும் எதிர்பார்க்கப்பட்ட ஆயுட்காலமாக இருந்த மனிதர்களின் ஏழு குழுக்கள் அடங்கிய தரவுத் தொகுதிகள் தயாரிக்கப்பட்டன. இவர்களுள் வேலைக்குச் செல்லும் மற்றும் 1800களின் தொடக்கத்தில் ட்ரினிடாட் மற்றும் அமெரிக்காவில் இருந்த முன்னாள் அடிமைகள்; ஸ்வீடன், அயர்லாந்து, உக்ரைன் ஆகிய நாடுகளில் 18, 19, 20ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட பஞ்சத்தை அனுபவித்த மக்கள்; 1846, 1882ஆம் ஆண்டுகளில் தட்டம்மை பரவலால் பாதிக்கப்பட்ட ஐஸ்லாந்து மக்கள் ஆகியோர் அடங்குவர்.

தெற்கு டென்மார்க் பல்கலைக்கழகத்தின் பொது சுகாதார அமைப்பைச் சேர்ந்த முன்னணி ஆராய்ச்சியாளர் வெர்ஜினா ஜார்ல்லி, எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலம் ஆண், பெண் பாலின இடைவெளிக்கு மரபணு, ஹார்மோன்கள் போன்ற உயிரியியல் காரணிகளேதான் காரணம் என்று கூறுகிறார். இதற்கு இவர்,‘புதிதாகப் பிறந்த பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளைவிட வலுவாக இருக்கிறார்கள்’ என்று எடுத்துக்கூறுகிறார்.

உக்ரைனில் 1933இல் பஞ்சம் ஏற்பட்டபோது, பெண் குழந்தைகள் சராசரியாக 10.85 வயது வரை வாழ்ந்தனர், ஆனால் ஆண் குழந்தைகள் 7.3 வயது வரையில் மட்டுமே உயிர் வாழ்ந்தனர்.

1800களில் மேற்கு ஆப்ரிக்காவில், சிறுமிகள் அதிக காலம் வாழ்ந்தனர். 1820இல், 1843இல் லைபீரியாவுக்கு இடம்பெயர்ந்த விடுவிக்கப்பட்ட அமெரிக்க அடிமைகள், இதுவரையில் பதிவான மிக அதிக இறப்பு விகிதங்களைக் கண்டனர். வந்துசேர்ந்த ஒரே ஆண்டில் 43% பேர் இறந்தனர். எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலம் நம்ப முடியாத அளவுக்குக் குறைவாக, ஆண் குழந்தைகள் 1.68 வயதாக இருந்தது; ஆனால் பெண் குழந்தைகளின் ஆயுட்காலம் 2.23 ஆக இருந்தது.

பெண்களுக்கு சாதக அம்சமாக இது இந்தளவுக்குக் குறிப்பாகவும், தொடர்ச்சியாகவும் இருந்துவருவது ஆச்சரியமான ஒன்று என்று ஜாருல்லி கூறுகிறார். இதில் அதிக ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த நெருக்கடிகளின்போது இரண்டு பாலினத்தவரிடையே எதிர்பார்க்கப்படும் மனித ஆயுட்காலம், பச்சிளம் ஆண், பெண் குழந்தைகளின் உயிர்பிழைத்தல் கவனத்தைக் கவரும் வேறுபாடுகளால் தீர்மானிக்கப்படுகிறது. இது மிகவும் சுவாரஸ்யமான முடிவு.

வன்முறைகள் அல்லது ஆபத்தை எதிர்கொள்ளும் காரணிகள் இருந்தாலும்கூட பெண்களிடம் காணப்படும் இரட்டை எக்ஸ் குரோமோசோம், ஈஸ்ட்ரஜோன் ஹார்மோன்கள் பெண்கள் ஆண்களைவிட அதிக காலம் வாழ்வதற்கான நம்பத்தகுந்த விளக்கங்கள் என்று ஜாருல்லி குறிப்பிடுகிறார்.

எளிமையாகக் கூறுவதென்றால், எக்ஸ் குரோமோசோம்களில் ஏதாவது மோசமான மாற்றங்கள் ஏற்படும்போது, பெண்களுக்கு இருக்கும் இன்னொரு எக்ஸ் ஒரு பகுதியாக அல்லது முழுவதுமாக அதைச் சமன்செய்துவிடும், ஆனால் ஆண்களுக்கு இது சாத்தியமில்லை என்கிறார் ஜாருல்லி.

மிக முக்கியமான பெண் ஹார்மோன்கள், ஈஸ்ட்ரோஜன்கள் ரத்த நாளங்களைப் பாதுகாத்து, பல்வேறு நோய்களிலிருந்து காக்கின்றன. டெஸ்டோஸ்டிரோன் என்பது மிக முக்கியமான ஆண் ஹார்மோன். இது, விபத்து, வன்முறை மரணங்களால் ஏற்படும் ஆபத்து, ஆண்களுக்கே உரிய பொறுப்பற்ற நடவடிக்கைகள் அதிகரிப்பது ஆகியவற்றை ஏற்படுத்துவதற்கான காரனமாக அமைவதுடன், பல அபாயகரமான நிலைமைகள் உருவாகும் ஆபத்தையும் அதிகரிக்கச் செய்கிறது என்று ஜாருல்லி கூறுகிறார்.

நன்றி: https://www.theguardian.com/global-development/2018/jan/15/scientists-confirm-what-women-always-knew-men-really-are-the-weaker-sex

தமிழில்: ராஜலட்சுமி சிவலிங்கம்

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

சனி 20 ஜன 2018