தாஜ்மஹால்: அமலுக்கு வந்த புதிய திட்டம்!

தாஜ்மஹாலைக் காண இன்று (ஜனவரி 20) முதல் நாள்தோறும் 40,000 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.
உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாஜ்மஹால், ஆக்ரா நகரின் யமுனை ஆற்றங்கரையில் அமைந்திருக்கிறது. முகலாய மன்னரான ஷாஜகான், இறந்துபோன தன் மனைவி மும்தாஜின் நினைவாக இதைக் கட்டியதால், இது காதலின் சின்னமாகக் கருதப்படுகிறது. சுமார் 15 ஆண்டுகள் (1632 முதல் 1653 வரை) 22,000 பணியாட்களைக் கொண்டு பளிங்குக் கற்களால் கட்டிமுடிக்கப்பட்டது.