மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 ஜன 2018

சன்னி லியோனுக்கு மெழுகுச் சிலை!

சன்னி லியோனுக்கு மெழுகுச் சிலை!

கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு டெல்லியில் உள்ள பிரபல மியூசியத்தில் மெழுகுச் சிலை நிறுவப்பட உள்ளது.

பாலிவுட் சினிமாவுலகில் பல படங்களில் நடித்திருந்தபோதிலும் தென்னிந்திய சினிமா ரசிகர்களால் அறியப்பட்ட முகமென்பதால், தென்னிந்திய மொழிகளில் சரித்திரப் படமாக தயாராகவிருக்கும் `வீரமாதேவி’ படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமானார் சன்னி லியோன். இதற்காகக் கத்திச் சண்டை, குதிரையேற்றம் மற்றும் சண்டைக் கலைகளையும் கற்றுவருகிறார்.

சன்னி லியோனுக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. கேரள மாநிலத்திற்கு அவர் வருகை தந்தபோது திரண்ட லட்சக்கணக்கான ரசிகர் கூட்டம், பெங்களூரு புத்தாண்டு நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் எனக் காவல் துறையினர் அனுமதி மறுத்திருப்பது ஆகியவை இதற்குச் சான்றுகள்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள பிரபல மியூசியமான மேடம் டுசாட்டில் சன்னி லியோனுக்கு மெழுகுச் சிலை ஒன்றை நிறுவ இருக்கிறார்கள். சன்னி லியோனின் தத்ரூபமான சிலையை உருவாக்குவதற்காக அவரது கருவிழி, முடி, நிறம், கை, கால், உடல் ஆகியவற்றை அளவெடுத்துச் சென்றுள்ளனர். இந்தத் தகவலை ஒரு வீடியோ மூலம் வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார் சன்னி.

இந்த மியூசியத்தில் ஏற்கெனவே அமிதாப் பச்சன், ஷாருக் கான், ஐஸ்வர்யா ராய், சச்சின் எனப் பல பிரபலங்களின் சிலை இடம் பிடித்துள்ளன. அந்த வரிசையில் தற்போது சன்னி லியோனின் சிலையும் இடம்பெற இருக்கிறது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 20 ஜன 2018