நடந்து போகவும் விடமாட்டீங்களா? :அப்டேட் குமாரு

உலகமே இடிஞ்சாலும் தூசியை தட்டிட்டு எந்திரிச்சு அதையும் கலாய்ச்சு ஸ்டேட்டஸ் போட கிளம்பிருவாங்கன்னு நினைக்குறேன். பஸ் டிக்கெட் ரேட்டை ஏத்தின உடனே அதுனால விலைவாசி எந்தளவுக்கு உயரும்னு நம்ம ஆளுங்க தான் கணிக்கிறாங்க. அதே நேரத்தில அதை காமெடியா கலாய்ச்சுக்கவும் செய்றாங்க. இனிமேல் கவர்மெண்ட் பஸ்ல ட்ராவல் பண்றவங்களுக்கு தான் பெண்ணை கல்யாணம் பண்ணி கொடுப்பேன்னு நிபந்தனையெல்லாம் போடுவாங்களேன்னு வருத்தப்பட்டு ஸ்டேட்டஸ் தட்டுறாங்க. ஆண்டாள் மேட்டர் முடிவுக்கு வரும்னு பார்த்தா ஜவ்வு மிட்டாய் மாதிரி இழுத்துகிட்டே போகுதே. இன்னைக்கு வைரமுத்து ரிலீஸ் பண்ணுன வீடியோவை பார்த்தீங்களா? ஏற்கனவே வார்த்தையை திரிச்சி சொல்லிட்டாங்கன்னு பீல் பண்ணுனார்ல. அதான் இப்ப விளக்கம் கொடுக்கும் போது அவரோட தமிழ்ல இருந்து மொழிமாற்றம் செய்யப்போறேன்னு யாரும் எதுலயாவது கோர்த்து விட்டுற கூடாதுன்னு அவர் பேசுன வீடியோவுக்கு சப்-டைட்டில்லாம் போட்டு அனுப்பியிருக்கார். இந்த விஷயம் தெரிஞ்சா நம்மாளுங்க அதுக்கும் மீம்ஸ் போடுவாங்களே..
@Kozhiyaar
வயது ஆக ஆக வேகத்தைக் குறைத்துக் கொள்வது, வீரம் குறைவதால் அல்ல, விவேகம் அதிகரிப்பதால்!!
@senthilcp
சார்,ஏற்கனவே வந்த"பட"டைட்டிலை நம்ம படத்துக்கு வைக்கலாமா?
கதை யே ஏற்கனவே வந்த படத்தோடதுதானே?
@Kozhiyaar
மனைவி கிட்ட கூட சொல்லிட்டு தான் எடுக்கணும்!!
நண்பன் கிட்ட மட்டும் தான் எடுத்துட்டு சொல்லிக்கலாம்!!!
@MohammedMastha
தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணம் உயர்வு
- செய்தி
பஸ் ஓடினாலும் சிக்கிக்கிகிறது மக்கள்தான்
ஓடலைனாலும் சிக்கிக்கிகிறது மக்கள்தான்...
@DhasthanSatham
அண்ணே,எண்ண வேல பாக்குறீங்க???
வாட்ச்மேன் வேலை தம்பி...
சாதாரண வாட்ச்மேன் வேலை தான, எங்க வேலை பாக்குறீங்க??
நித்தியானந்தா ஆசிரமதத்துல
தெய்வமே
@SeLFiShEnGiNeeR
தமிழக மக்கள் நோவ் :
பஸ்ல போவோம் - கட்டணம் உயர்வு
ஆட்டோல போவோம் - அங்கே அதுக்கும் மேல
பைக்ல போவோம் - அங்குட்டு ஒரு லிட்டர் பெட்ரோல் ₹70
முடியல
@r_vichu
தன்னை நல்லா கண்ணும் கருத்தமா பாத்துக்கிற ஆணையே பெண்கள் தேடிக்கொண்டிருக்கும் வரை பெண்ணடிமைத்தனம் தொடரும்.
@pandi_tamilan
பணமதிப்பிழப்புநீக்கம் மற்றும் ஜிஎஸ்டியை வைத்து மட்டும்
என்னை மதிப்பீடு செய்யாதீர்கள்-மோடி
மக்கள்: ஆளவிடுங்கப்பா சாமி
மறுபடியும் முதல்ல இருந்தா..
@ShanRajuOffl
ஒபிஎஸ் அவர்களும் இபிஎஸ் அவர்களும் சின்னமருது பெரிய மருது போல் செயல்படுகிறார்கள் -அமைச்சர் செல்லூர் ராஜீ
சோட்டா பீம் ல வர்ற டோலு போலு மாதிரி இருந்துக்கிட்டு மருது பிரதர்ஸாம் ல
@CreativeTwitz
பஸ் கட்டண உயர்வு இப்போதைக்கு உள்ளாட்சித் தேர்தல் வராது என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டது.
@ajmalnks
சிறந்த சேவையை தொடர்ந்து வழங்க பேருந்து கட்டண உயர்வை தவிர்க்க முடியவில்லை - தமிழக அரசு
குடையை பிடிச்சுக்கிட்டு பேருந்துல போறதை எப்போ சேவையில் சேர்த்தானுகன்னு தெரியலை...
@Selvatwitz
மக்களிடமே ஓட்டுக்கு கையேந்தி மக்களையே கையேந்த வைக்கும் இந்த அரசு புத்திசாலியான அரசுதான்,
ஆண்ட கட்சியும் ஆளும் கட்சியும்
இரண்டுமே
@SKtwtz
பக்கத்து மாநிலத்தில எல்லாம் வால்வோ, பென்ஸ் பஸ் ன்னு விடுறாங்க அங்க பேருந்து கட்டணம் அதிகமா இருந்தா ஒரு நியாயம் இருக்கு..
இங்க தகர டப்பா ல உக்காந்து போறதுக்கு எதுக்கு இவளோ அதிக கட்டணம்னு தெரில
@manipmp
புது வருசத்தை சரியாய் எழுத லேட்டாகும் என்பதுபோலத் தான்..
புதுப்பேட்டர்னை போனில் சரியாய் வரைய காலதாமதமாகும்
@Thaadikkaran
பேருந்து கட்டண உயர்வு தொடர்பான மக்களின் சந்தேகத்தை தீர்க்க வேண்டும் என ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல்- போக்குவரத்து மேலாண் இயக்குநர்
ம்க்கும், ஸ்டாப் வந்தாலும் சரி, பேலன்ஸ் கேட்டாலும் பதில் சொல்ல மாட்டாங்க இதுல இதுக்கு விளக்கம் சொல்லிட்டாலும்..!!
@SKtwtz
அரசு பேருந்தில் பயணம் செய்யும் அளவு வசதியான பையன்தான் வேணும்னு பெண்வீட்டில இனி ஒரு கண்டிஷன் போடுவாங்களே அத நினைச்சாதான் கவலையா இருக்கு
@Kozhiyaar
பணமா குணமா என்னும் போராட்டத்தில் நம் பிள்ளைகள் எதை தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதில் தெரிந்துவிடும் நம் வளர்ப்பு!!!
@vishnut87
காய்கறி விலை உயர்வு
பால் விலை உயர்வு
சமையல் எரிவாயு உயர்வு
பேருந்து கட்டணம் உயர்வு
ஆனா நம்ம சம்பளம் மட்டும் அதேதான். என்ன வாழ்க்கைடா இது
@Kozhiyaar
வாட்ஸ் அப்பில் சேமித்து வைக்காத எண்ணுடன் வரும் செய்தியில் அனுப்பியவர் முகம் இருந்தும் கண்டுப்பிடிக்க முடியாமல் இருப்பது வேதனை தான்!!!
எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே!?
@udhayamass1
இனி ஆண்டுதோறும்
மாற்றியமைக்கப்படவுள்ளது
பேருந்துக் கட்டணம்
-தமிழக அரசு
அணைய போகும் விளக்கு
மிக பிரகாசமாக தான் எரியும்