மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 ஜன 2018

வேலூரில் கால்பதிக்கும் ஆளுநர்!

வேலூரில் கால்பதிக்கும் ஆளுநர்!

தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்துவந்தாலும், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் மாவட்ட ஆய்வில் எந்த தொய்வும் ஏற்படவில்லை. இன்று (ஜனவரி 20) முதல் மூன்று நாட்கள், அவர் தர்மபுரியிலும் வேலூரிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

ஆளுநர் பன்வாரிலால், கடந்த நவம்பர் மாதம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, அங்குள்ள மாவட்ட அதிகாரிகளை அழைத்து ஆய்வு நடத்தினார். இது தமிழக அரசியலில் பலத்த அதிர்வை ஏற்படுத்தியது. திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் ஆளுநரின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தனர். அரசின் நடவடிக்கைகளில் ஆளுநர் தலையிடக் கூடாது என்றனர். ஆனால், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அமைச்சர்கள் இதனை வரவேற்றனர். அப்போது, கோவையைத் தொடர்ந்து தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு மேற்கொள்வேன் என்று தெரிவித்தார் பன்வாரிலால்.

அதேபோல திருநெல்வேலி, கன்னியாகுமரி, கடலூர், சேலம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்குச் சென்றுவந்தார். இதன் தொடர்ச்சியாக, இன்று தர்மபுரியில் நடக்கவிருக்கும் சில நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்கிறார். அதன் பின்பு தர்மபுரி சுற்றுலா மாளிகையில் தங்கும் ஆளுநர், நாளை காலை அங்கு நடைபெறும் தூய்மை இந்தியா திட்டப்ப ணிகள் குறித்து ஆய்வு செய்கிறார். மாலையில் வேலூருக்குச் செல்லும் ஆளுநர் அங்குள்ள ஸ்ரீபுரம் தங்கக் கோவிலைப் பார்வையிடுகிறார். இதனைத் தொடர்ந்து காட்பாடியிலுள்ள ஒரு பள்ளி நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார் என்றும், அந்த மாவட்டத்திலுள்ள மகளிர் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவிருக்கிறார் என்றும் ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 22ஆம் தேதியன்று வேலூர் நகரத்தில் தூய்மை இந்தியா திட்டப் பணிகள் குறித்து ஆளுநர் ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறார். அப்போது, அங்குள்ள அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது. பின்பு, மாலையில் வேலூர் கோட்டையில் ஆய்வு நடத்திய பிறகு, அவர் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

சனி 20 ஜன 2018