மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 ஜன 2018

மீண்டும் சீனு ராமசாமி படத்தில் வசுந்தரா

மீண்டும் சீனு ராமசாமி படத்தில் வசுந்தரா

தென்மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலம் கவனம்பெற்ற நடிகை வசுந்தரா காஷ்யப் மீண்டும் சீனு ராமசாமியின் அடுத்த படத்தில் நடிக்கவிருக்கிறார்.

சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான தென்மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் விஜய் சேதுபதி. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தவர் வசுந்தரா காஷ்யப். கிராமப்புறம் சார்ந்த இந்தப் படத்தின் கதைக்களத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் வசுந்தரா.

அந்தப் படத்திற்குப் பிறகு போராளி, சொன்னா புரியாது, சித்திரையில் நிலாச்சோறு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு சீனு ராமசாமியின் இயக்கத்தில் உருவாகவிருக்கும் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இது குறித்து சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “எங்கள் தென்மேற்குப் பருவக்காற்றின் நாயகி செல்வி வசுந்தரா சியட்ராவும் (தற்போது வசுந்தரா காஷ்யப்), நானும் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்தோம். நான் இயக்கும் படமொன்றில் அவர் நடிக்கவும் இருக்கிறார்” என்று குறிப்பிட்டதுடன் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

சனி 20 ஜன 2018