மிளகு இறக்குமதியால் உள்நாட்டில் பாதிப்பு!

குறைந்த விலைக்கு இலங்கையிலிருந்து அதிகளவில் மிளகு இறக்குமதி செய்யப்படுவதால் உள்நாட்டில் விளையும் மிளகு, விலைச் சரிவைச் சந்தித்து வருகிறது.
இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் மிளகு (10 டன்) 400 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அதேநேரத்தில் இந்தியாவில் விளையும் மிளகின் விலை ரூ.410 ஆக உள்ளது. எனவே பெரும்பாலான வர்த்தகர்கள் இலங்கை மிளகை அதிகமாக வாங்கிச் செல்கின்றனர். இதனால் உள்நாட்டு மிளகுக்கான தேவை குறைந்துள்ளதோடு, அவற்றின் விலையையும் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மிளகு விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். உள்நாட்டு மிளகு 410 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. இதற்குக் குறைந்தது ரூ.420 ஆவது கிடைக்க வேண்டும் என்று விற்பனையாளர்கள் விரும்புகின்றனர்.