பாஜகவைத் தாக்கிய தம்பிதுரை

தமிழகத்தில் நோட்டாவை விடக் குறைவான வாக்குகள் பெற்றதே தேசியக் கட்சிகளின் வளர்ச்சி என்று மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை விமர்சனம் செய்துள்ளார்.
கரூரில் இன்று (ஜனவரி 20) செய்தியாளர்களிடம் பேசிய மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை பாஜகவை மறைமுகமாக விமர்சித்துப் பேசினார். "திராவிடத்தை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது. ஏற்றத் தாழ்வுகளைக் களைந்து அனைவரும் சமமாக வாழ திராவிட இயக்கம்தான் காரணம். தேசியக் கட்சிகள் செய்வதையெல்லாம் பார்த்துக்கொண்டுதான் உள்ளீர்கள். தமிழகத்தில் டெபாசிட் வாங்க முடியாத நிலையில்தான் தேசியக் கட்சிகள் உள்ளன. நோட்டாவைவிடக் குறைவான வாக்குகளைப் பெற்றதுதான் தேசியக் கட்சிகளின் சாதனை" என்றார்.
முன்னதாக, கடந்த டிசம்பர் 29ஆம் தேதி தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது என்று தம்பிதுரை குற்றம் சாட்டியிருந்தார்.