மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 ஜன 2018

மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு!

மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு!

அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் அடிப்படைப் பயிற்சி பெறுவதிலிருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்களித்து இன்று (ஜனவரி 20) தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஊன்றுகோல் மற்றும் சக்கர நாற்காலி உதவியுடன் நகருபவர்கள் எனத் தனித்து தங்களுடைய வேலைகளைச் செய்ய முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு, பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் அளிக்கப்படும் அடிப்படைப் பயிற்சியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் 100 விழுக்காடு பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கும் வேறு குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கும் பயிற்சி பெறுவதிலிருந்து விலக்களிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செவித் திறன் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கும் விலக்கு அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

100 விழுக்காடு குறைபாடுள்ளவர்களுக்கு நேரடியாகவும், குறைவான குறைபாடு உள்ளவர்களுக்கு மாவட்ட மருத்துவக் குழுவின் பரிந்துரையின் பேரிலும் விலக்களித்து ஆணைகள் பிறப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

சனி 20 ஜன 2018