மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 ஜன 2018

நியூட்ரினோவுக்கு எதிராக விழிப்புணர்வுப் பிரச்சாரம்!

நியூட்ரினோவுக்கு எதிராக விழிப்புணர்வுப் பிரச்சாரம்!

நியூட்ரினோ திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி, வரும் 31ஆம் தேதி தேனி மாவட்டத்தில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கம் அறிவித்துள்ளது.

தேனி மாவட்டம் தேவாரம் அருகில் உள்ள பொட்டிப்புரத்தில் அமைய இருந்த நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து, அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் பெரிய போராட்டங்களை நடத்திவந்தனர். இதையடுத்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்து, நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக இடைக்காலத் தடை பெற்றுள்ளார்.

தற்போது, நியூட்ரினோ திட்டத்தை, சிறப்புத் திட்டமாக அறிவித்து, எல்லாத் தடைகளையும் நீக்கி, சுற்றுச்சூழல் அனுமதி அளிக்க, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆயத்தமாக இருப்பதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்நிலையில் நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம், சென்னையில் இன்று (ஜனவரி 20) மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில், வைகோ தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், இயக்கத்தின் செயலாளர் லெனின் இராஜப்பா, தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் கி.வே.பொன்னையன், மே 17 இயக்கத்தின் சார்பில் திருமுருகன் காந்தி, பூவுலகு நண்பர்கள் அமைப்பின் சார்பில் வெற்றிச்செல்வன், மதிமுக தேனி மாவட்டச் செயலாளர் சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், "இந்திய அரசியலமைப்பு, மாநிலங்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளின்படி, ஒரு மாநிலத்தில் எத்தகைய திட்டங்களை அனுமதிக்கலாம் என முடிவு எடுப்பது, மாநில அரசின் உரிமையாகும். இதைக் கருத்தில் கொள்ளாமல், மத்திய அரசுத் துறைச் செயலாளர்களின் கூட்டம் நடைபெற்று, அவர்களாகவே முடிவு எடுத்துக்கொண்டு, தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றார்கள். இவ்வாறு செய்வது, சட்டத்திற்குப் புறம்பான செயலாகும். சட்டத்தை மதித்துக் கடைப்பிடிக்க வேண்டிய மத்திய அரசே, சட்டத்தைக் காலில் போட்டு மிதிக்க முயற்சிக்கின்றது" என்று குற்றம் சாட்டப்பட்டது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

சனி 20 ஜன 2018