மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 ஜன 2018

1000 விற்பனை மையங்கள் திறப்பு!

1000 விற்பனை மையங்கள் திறப்பு!

ஆன்மீகத் தலைவரான ரவி சங்கர், வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள் விற்பனையில் 1000 சில்லறை விற்பனை மையங்களை 2018ஆம் ஆண்டு இறுதிக்குள் தொடங்கத் திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து ’ஸ்ரீ ஸ்ரீ தத்வா’ நுகர்பொருள் விற்பனை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அரவிந்த் வச்சார்யா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "ஆன்மீகத் தலைவர் ரவி சங்கரின் எஃப்.எம்.சி.ஜி நிறுவனமான ஸ்ரீ ஸ்ரீ தத்வா இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் 1000 சில்லறை விற்பனை நிலையங்களைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. மேலும், இந்தக் கடைகளின் மூலம் ரூ.500 கோடி வருவாய் ஈட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.

இதன்படி உணவுப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், சுகாதாரம் சார்ந்த பொருட்கள் ஆகியவற்றை இந்நிறுவனம் விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது. அதேபோல ஆயுர்வேத மருந்துகள் மற்றும் லைஃப்ஸ்டைல் பொருட்கள் விற்பனையிலும் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் பிக்பேஸ்கட் நிறுவனத்துடன் இணைந்து ஆன்லைன் விற்பனையிலும் இந்நிறுவனம் ஈடுபடுகிறது. 120க்கும் அதிகமான பொருட்கள், 44 தனிநபர் பாதுகாப்புப் பொருட்கள், 82 உணவுப் பொருட்கள் ஆகியவற்றை விரைவில் பிக்பேஸ்கட் வழியாக ஆன்லைனில் வாங்கலாம் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 20 ஜன 2018