மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 ஜன 2018

சாம்சங் நிறுவனத்தின் சீரிஸ் மாடல்!

சாம்சங் நிறுவனத்தின் சீரிஸ் மாடல்!

சாம்சங் நிறுவனத்தின் புதிய j8 மாடல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்மார்ட் போன் விற்பனையில் முதன்மையான நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்துவரும் சாம்சங் நிறுவனம், அதன் வெற்றி பெற்ற மாடல்கள் வரிசையை அப்கிரேடு செய்து புதிய மாடலாக வெளியிடுவது வழக்கம். அதன்படி நோட் சீரிஸ் மாடல்கள் மற்றும் A சீரிஸ் மாடல்கள் பயனர்கள் கவனத்தை அதிகம் ஈர்த்தவை. அதனால் அதில் பல்வேறு புதுமையான மாற்றங்களை மேற்கொண்டு அவ்வப்போது புதிய மாடல்களை சாம்சங் நிறுவனம் வெளியிடும்.

அதன் தொடர்ச்சியாக, கடந்த ஆண்டு வெளியான J சீரிஸ் மாடலான J2 மற்றும் J7 ஆகிய மாடல்களின் வெற்றியைத் தொடர்ந்து J8 என்ற புதிய மாடலை வெளியிட சாம்சங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 4GB RAM மற்றும் 32GB இன்டெர்னல் வசதியுடன் இந்த மாடல் வெளியாகும் என்ற தகவல் அதனுடன் வெளியாகியுள்ளது.

12MP பின்புற கேரமாவும், 8MP செல்பி கேமராவும் கொண்டுள்ள இந்த மாடல் ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ உடன் வெளியாகும் எனவும், 5.5 இன்ச் திரையளவு இருக்கும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

சனி 20 ஜன 2018