மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 ஜன 2018

பேருந்துக் கட்டணம் உயர்வு: பொதுமக்கள் அவதி!

பேருந்துக் கட்டணம் உயர்வு: பொதுமக்கள் அவதி!

தமிழ்நாட்டில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று இரவு திடீரென்று அரசு பேருந்துக் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டது. இந்தக் கட்டண உயர்வு இன்று(ஜனவரி 20) முதல் அமலுக்கு வந்துள்ளதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சாலைமறியல்

பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சாலை மறியலில் ஈடுபட்ட பயணிகளை காவல்துறையினர் கைது செய்தனர். இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களும் பேருந்துக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று முழக்கமிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ரத்தாகும் பாஸ்

சென்னை மாநகரப் பேருந்துகளில், கட்டண உயர்வினால், ரூ.50 கட்டணம் கொண்ட தினசரி பேருந்து(பஸ்) பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பயணம் செய்வதற்கு அதிக அளவு பணம் செலவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணம் செய்வதற்காக மாதாந்திர கட்டண பாஸ், வாராந்திர கட்டண பாஸ், தினசரி கட்டண பாஸ் ஆகியவை வழங்கப்படுகிறது.

மாதாந்திர கட்டண பாஸ் ரூ.1000 எனவும், வாராந்திர கட்டண பாஸ் ரூ.300 எனவும், தினசரி கட்டண பாஸ் ரூ.50 எனவும் உள்ளது. இந்த பாஸ் வைத்திருப்பவர்கள் மாநகரப் பேருந்துகளில் ஏறி சென்னை நகருக்குள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். இந்த நிலையில் ரூ.50 கட்டணம் கொண்ட தினசரி பேருந்து பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சென்னையில் பொதுமக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் பேருந்து பாஸ் வைத்திருப்பவர்களுக்குக் கட்டணம் உயர்த்தப்படுமா? அல்லது அதே கட்டணம் தொடருமா என்ற சந்தேகம் இருந்தது.

மாதாந்திர மற்றும் வாராந்திர பேருந்து பாஸ்களை வைத்திருப்பவர்கள் தொடர்ந்து பேருந்துகளில் பயணம் செய்யலாம். அந்த பாஸ்களின் கட்டணத்தை எவ்வளவு உயர்த்துவது என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது. உயர்த்திய கட்டணத்தை அறிவித்த பிறகு மாதாந்திர மற்றும் வாராந்திர பாஸ் வைத்திருப்பவர்கள் கூடுதல் கட்டணத்தைச் செலுத்தி பேருந்துகளில் பயணிக்கலாம்.

ஆம்னி பேருந்தாக மாறிய அரசு பேருந்து

சென்னையிலிருந்து பெங்களூருக்கு செல்ல ரூ.360ஆக இருந்த பேருந்து கட்டணம் ரூ.485 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் சென்னையிலிருந்து மதுரைக்குச் செல்ல ரூ.325 ஆக இருந்த பேருந்துக் கட்டணம் தற்போது 515ஆக உயர்ந்துள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 20 ஜன 2018