மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 ஜன 2018

டெல்லியில் இன்று ஆ.ராசாவின் புத்தகப் புயல்!

டெல்லியில் இன்று  ஆ.ராசாவின் புத்தகப் புயல்!

2ஜி வழக்கில் இருந்து விடுதலை ஆன முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா இந்த வழக்கு பற்றிய தனது ஆங்கிலப் புத்தகமான, ‘2ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ்’ என்ற புத்தத்தை இன்று (ஜனவரி 20) மாலையில் டெல்லியில் வெளியிடுகிறார். இந்தப் புத்தகம் அரசியல் ரீதியாக புயலைக் கிளப்பும் என்பதால் இதில் ராசா என்னென்ன சொல்லியிருக்கிறார் என்பதைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சரும் திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளருமான ஆ.ராசா, கடந்த டிசம்பர் 21-ம் தேதி 2ஜி வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். ராசா உட்பட அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

2ஜி வழக்கில் தான் எதிர்கொண்ட நெருக்கடிகள், இந்த விவகாரம் பற்றிய சட்ட ரீதியான, அரசியல் ரீதியான உண்மைகள் ஆகியவற்றைத் தொகுத்து இந்த வழக்கு விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே ஒரு புத்தகமாக எழுதினார் ஆ.ராசா. ஆனால் தீர்ப்பு வருவதற்குள் அதை வெளியிட வேண்டாம் என்று அவரது நலம் விரும்பிகள் சொன்ன யோசனையை ஏற்று புத்தக வெளியீட்டை ஒத்தி வைத்தார்.

இந்நிலையில் தீர்ப்பில் தான் விடுதலையான நிலையில், 2ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ் என்ற ஆ.ராசாவின் ஆங்கிலப் புத்தகம் ஹர் ஆனந்த் பப்ளிகேஷன்ஸ் சார்பில் இன்று வெளியிடப்படுகிறது.இன்று மாலை 5.30 மணிக்கு டெல்லியில் ரஃபி மார்க் வளாகத்தில் ’இந்திய அரசியலைப்புச் சட்ட கிளப்’ பின் சபாநாயகர் ஹால் இணைப்பில் புத்தக வெளியீட்டு விழா நடைபெறுகிறது.

இந்த வெளியீட்டு நிகழ்வை ஒட்டி நேற்று இரவு அதே அரங்கத்தில் நூல் ஆசிரியரான ஆ.ராசாவும், பதிப்பாளர் நரேந்திரகுமாரும் ஒரு டின்னர் அளித்தனர். இதில் நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்களும், ராசாவின் நண்பர்களான பல வழக்கறிஞர்களும் கலந்துகொண்டனர்.

‘’டெல்லியில் இதுபோன்ற புத்தக வெளியீட்டுக்கு முந்தைய டின்னர்கள் வழக்கம்தான். ஆனால் தமிழ்நாட்டில் இருந்து இதுபோல யாரும் செய்தது கிடையாது. அதை ராசா தனிப்பட்ட முறையில் செய்திருக்கிறார். நேற்று டின்னரில் ஒவ்வொரு டேபிளாக சென்று பத்திரிகையாளர்களோடும், நண்பர்களோடும் கலந்துரையாடினார். இன்று வெளியிட இருக்கும் ஆ.ராசாவின் புத்தகம் இந்திய அளவில் அரசியல் புயலைக் கிளப்பும் விதமாக இருக்கும் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது’’ என்கிறார்கள் டெல்லி பத்திரிகையாளர்கள்.

இந்த புத்தக வெளியீட்டு விழாவை ஒட்டி ஏற்கனவே திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆசி வாங்கிக் கொண்ட ஆ.ராசா, செயல் தலைவர் ஸ்டாலினிடமும் வாழ்த்து பெற்றார். அவரது சொந்த ஊரான பெரம்பலூரில் இருந்தும், ஊட்டியில் இருந்தும் நண்பர்கள், கட்சிப் பொறுப்பாளர்கள் ஏராளமானோர் இந்த விழாவுக்காக டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

சனி 20 ஜன 2018