மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 ஜன 2018

உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும்!

உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும்!

மணல் குவாரிகளை 6 மாதங்களில் மூட வேண்டும் எனத் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு எதிராகத் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகள் அனைத்தையும் 6 மாத காலத்திற்குள் மூட வேண்டும் என்று 2017ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. தனி நீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவிற்குத் தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று(ஜனவரி 19) விசாரணைக்கு வந்த வழக்கில், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்ய மறுத்து மணல் குவாரிகளை மூட வேண்டும் என்ற உத்தரவு தொடரும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இத்தடன் இந்த வழக்கைத் தள்ளுபடியும் செய்தனர்.

"இதைதொடர்ந்து, மணல் குவாரிகளின் மீதான தடைக்கு எதிராகத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது" என்று அந்தச் சங்கத்தின் தலைவர் செல்ல. ராசாமணி செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

சனி 20 ஜன 2018