மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 ஜன 2018

ஜெயலலிதாவுக்கு ஸ்லோ பாய்சன்!

ஜெயலலிதாவுக்கு ஸ்லோ பாய்சன்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, போயஸ் கார்டனில் தொடர்ந்து ஸ்லோ பாய்சன் வழங்கப்பட்டதாகக் கூறி அதிர்ச்சி உண்டாக்கியிருக்கிறார் தமிழக முன்னாள் அமைச்சர் பொன்னையன். அதனால்தான் அவரது சர்க்கரை அளவு வெகுவாக அதிகரித்ததாகக் குற்றம் சாட்டியிருக்கிறார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதியன்று உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறித்து, தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கைகள் வெளியிட்டது. இரண்டரை மாதங்கள் கடந்த நிலையில், டிசம்பர் 5 ஆம் தேதியன்று ஜெயலலிதா மரணமடைந்ததாக அப்பல்லோ மருத்துவமனை அறிவித்தது. அதன்பிறகு, இப்போதுவரை அவரது மரணம் குறித்த சர்ச்சை தொடர்ந்து வருகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்துவதற்காக, முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை தமிழக அரசு நியமித்தது. இந்த ஆணையத்தின் பணிக்காலம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது; விசாரணை ஆணையத்தின் பணிகள் தொடர்ந்து நடந்துவருகிறது. இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் நேற்று (ஜனவரி 19) நடைபெற்ற அதிமுக கூட்டமொன்றில் கலந்துகொண்டு பேசினார் முன்னாள் அதிமுக அமைச்சர் பொன்னையன். போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதாவுக்கு ஸ்டீராய்டு ஊசிகள் போடப்பட்டதாக, அவர் கூறினார்.

”ஸ்டீராய்டு என்று சொல்லப்படக்கூடிய மருந்தை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடலில் செலுத்தியிருக்கிறார்கள். இதனை மெல்லக் கொல்லும் விஷம் என்று சொல்லலாம். அவசர காலத்தில் மட்டுமே இதனைப் பயன்படுத்தலாம்; ஒட்டுமொத்தமாக, ஒரு ஆண்டில் நான்கைந்து முறை இதனைச் செலுத்தலாம். ஆனால், தொடர்ந்து 7 மாத காலம் இந்த ஸ்டீராய்டு ஊசி போட்டதால், அம்மாவின் உடலில் சர்க்கரை அளவு 550 என்ற அளவுக்கும் அதிகமாக இருந்துள்ளது. இதனைத் திட்டமிட்டு செய்திருக்கிறார்கள்.

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோது, அவரது சர்க்கரை அளவு உயர்ந்திருந்தது. போயஸ் கார்டனில் வழங்கப்பட்ட சிகிச்சை விவரங்களை அப்பலோ மருத்துவமனை கேட்டுப் பெற்றபோது, இந்த விஷயம் தெரிய வந்தது” என்று தெரிவித்தார்.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

சனி 20 ஜன 2018