மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 ஜன 2018

பியூட்டி ப்ரியா

பியூட்டி ப்ரியா

எந்த அலர்ஜியாக இருந்தாலும், நம் முதல் தேடல் மிளகாகத்தான் இருக்க வேண்டும். `மிளகு மெள்ள மெள்ள நோய் எதிர்ப்பு சக்தியைச் சீராக்கும்’ என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

அறுகம்புல் நச்சு நீக்கி; அலர்ஜியை நீக்கக்கூடியது. இது `கரப்பான்’ எனப்படும் எக்ஸிமா நோய்க்கான சித்த மருத்துவத்தின் முதல் தேர்வு. செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயில் இந்தப் புல்லின் சாற்றையும் சில மூலிகைகளையும் சேர்த்துக் காய்ச்சி எடுக்கப்படும் `அருகன் தைலம்’ இந்திய மருத்துவ மருந்துகளில் மிகப் பிரபலமானது. அடாபிக் டெர்மடிட்டிஸ் (Atopic Dermatittis) எனும் அலர்ஜியால் சருமத்தின் நிறம் கறுத்து, அதீத அரிப்பைத் தரும் தோல் நோய்க்கு அருகன் தைலம் இதம் அளிக்கும் இனிய மருந்து.

நம் தோலை பாதுகாப்பதில் ஒரு கண் வைப்பது போன்று, எலுமிச்சை தோலிலும் ஒரு கண் வைத்தால் அபார நன்மைகள் பெறலாம்.

எலுமிச்சைச் சாற்றில் உள்ள சத்துக்களோடு ஒப்பிட்டு பார்த்தோமானால் அதன் தோலில்தான் வைட்டமின் சி மற்றும் ஏ, பீட்டா கரோட்டின், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், ஃபோலேட் போன்றவை உள்ளன. எது ஒன்றையும் சுத்தம் செய்வதில் இதன் தோல்தான் முதலிடத்தில் உள்ளது. இதன் தோல் மிகவும் நறுமணம் மிக்கதாகவும், புத்துணர்ச்சி அளிப்பதாகவும் உள்ளது.

எலுமிச்சையின் தோலில் நம் சருமத்திற்கு ஏற்ற அனைத்து நன்மைகளும் உண்டு. அதன் தோலில் இருக்கக்கூடிய அமிலமானது நம் சருமத்தை மிருதுவாக்கும். மேலும் பளிச் தோற்றத்தை கொடுக்கவல்லது. நம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி புது செல்கள் வளரத் தூண்டுகிறது. எலுமிச்சை தோலை வெயிலில் உலர்த்தி நன்கு காய்ந்தவுடன் அதை பொடித்து அத்துடன் தேன், சர்க்கரை, ஆலிவ் எண்ணெய் சேர்த்தால் முகத்திற்கான ஸ்க்ரப் தயார்.

அவ்வப்போது பயன்படுத்தி அழகி ராணியாய் வலம் வருகையில்

'என்னவள்

மேனி

தீண்டி

அழகாகின்றன

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 20 ஜன 2018