மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 ஜன 2018

அஸ்வின் சென்னை அணிக்கு தேவை: தோனி

அஸ்வின் சென்னை அணிக்கு தேவை: தோனி

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இடம் பெறவேண்டும் என அணியின் கேப்டன் மஹேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி 2ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த வருடம் ஐ.பி.எல் தொடரில் களமிறங்க உள்ளது. இந்நிலையில் இந்த முறை நடைபெறவிருக்கும் 11ஆவது சீசனிற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன.

அதில் ஒரு அணியில் குறிப்பிட்ட நபர்களை தக்க வைத்துக் கொண்டு மற்றவர்களை ஏலத்தின் மூலம் பெறவேண்டும் என புதிய விதிமுறை ஒன்றினை அறிமுகம் செய்தனர். அதனால் சென்னை அணி தோனி, சுரேஷ் ரெய்னா, மற்றும் ரவீந்தர் ஜடேஜா ஆகிய மூவரையும் தக்க வைத்துக் கொண்டது. எனவே அஸ்வின் அணியில் இடம்பெறுவாரா இல்லையா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழத் தொடங்கியது. இதற்கு நேற்று (ஜனவரி 19) சென்னை அணியின் ப்ரொமோஷன் பணியில் ஈடுபட்டிருந்த கேப்டன் தோனி பதில் கூறினார்.

அவர், “சென்னை அணியில் அஸ்வின் மிக முக்கியமான நபர். அவர் உள்ளூர் வீரர் என்பதால் அவரை முதலில் ஏலத்தில் எடுக்கவே சென்னை அணி முயற்சி செய்யும். அதன் பின்னரே மெக்குல்லம், பிராவோ போன்ற வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்” எனக் கூறினார். வருகிற 27 மற்றும் 28 ஆம் தேதி பெங்களூருவில் ஐ.பி.எல் ஏலம் நடைபெறவுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 20 ஜன 2018