மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 ஜன 2018

அண்டை மாநிலங்களை விடக் குறைவுதான்!

அண்டை மாநிலங்களை விடக் குறைவுதான்!

அண்டை மாநிலங்களை விட தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைவுதான் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.

போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவதைக் காரணம் காட்டி, நேற்று பஸ் கட்டணங்கள் திடீரென உயர்த்தப்பட்டன. அதன்படி, நகர் மற்றும் மாநகரப் பகுதிகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.3-லிருந்து 5 ஆகவும், அதிகபட்சம் 12 ரூபாயிலிருந்து 19 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து வகையான பேருந்துகளின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.இன்று முதல் அமலுக்கு வந்துள்ள இந்தக் கட்டண உயர்வினால் பொதுமக்கள் அனைவரும் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டு மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ள நிலையில், அண்டை மாநிலங்களை விட தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் குறைவுதான் என்று துணை முதல்வர் விளக்கம் தெரிவித்துள்ளார். அவர் "பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகும் கூட கேரள, கர்நாடக மாநிலங்களை விட தமிழகத்தில் குறைவான கட்டணம்தான் வசூல் செய்யப்படுகிறது. இந்த காலகட்டத்தில் பஸ் கட்டண உயர்வு அவசியமான ஒன்றாக உள்ளது. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தனியார் பேருந்துகளும் அரசுக்கு பணம் செலுத்தி வழித்தடங்களை வாங்குவதால் கட்டண உயர்வு அவர்களுக்கும் பொருந்தும், நிச்சயம் மக்கள் இதனை ஏற்றுக் கொள்வார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 20 ஜன 2018