மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 ஜன 2018

ரசிகர்களை ஏமாற்றிய சென்னை அணி!

ரசிகர்களை ஏமாற்றிய சென்னை அணி!

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நேற்று (ஜனவரி 19) நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணியை 3-1 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் அணி வீழ்த்தியது.

இந்தியன் சூப்பர் லீக்கின் நான்காவது சீசன் கடந்த நவம்பர் மாதம் (2017) முதல் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் லீக் போட்டிகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பெரும் அணிகள் அரையிறுதி வாய்ப்பினை பெறும்.

நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. மற்றும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின. இதற்கு முன்னரே சென்னையில் நடைபெற்ற ஒரு லீக் போட்டியில் இவ்விரு அணிகளும் மோதி உள்ளனர். அதில் சென்னை அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆனால் நேற்று நடைபெற்ற போட்டி நார்த் ஈஸ்ட் அணியின் சொந்த மண்ணில் நடைபெற்றதால், அந்த அணி கூடுதல் பலத்துடன் சென்னை அணியைத் திணறடித்தது.

போட்டியின் முதல் பாதி முடியும் முன் நார்த் ஈஸ்ட் அணி வீரர் செமின்லன் டௌஜெல் 42ஆவது நிமிடத்தில் முதல் கோல் அடித்து 1-0 என முன்னிலை பெற செய்தார். அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாதி தொடக்கத்திலும் (46) ஒரு கோல் அடித்து 2-0 என அணியை வலுவான நிலைக்கு உயர்த்தினார். இருப்பினும் இடைவிடாது போராடிய சென்னை வீரர்கள் பல்வேறு கோல் முயற்சிகளை மேற்கொண்டனர். பெரும்பாலும் சென்னை வீரர்களிடமே பந்து இருந்தது என்றாலும் கோல் அடிக்க தவறினர். ஆனால் கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திய நார்த் ஈஸ்ட் அணி வீரர் செமின்லன் டௌஜெல் 68ஆவது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடித்து ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார். எனவே நார்த் ஈஸ்ட் அணி 3-0 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 20 ஜன 2018