மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 ஜன 2018

பேருந்துக் கட்டணம் உயர்வு!

பேருந்துக் கட்டணம் உயர்வு!

அரசுப் பேருந்துகளின் கட்டணத்தைத் தமிழக அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது. இந்தக் கட்டண உயர்வு இன்று (ஜனவரி 20) முதல் அமலுக்கு வந்தது.

தமிழகத்தில் ஊதிய உயர்வு, ஓய்வூதியப் பலன்கள் கேட்டு அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் கடந்த மாதம் ஜனவரி 4 முதல் 11ஆம் தேதி வரை தொடர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து விரைவில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் 2001ஆம் ஆண்டு முதல் இரண்டு முறை மட்டுமே மாற்றியமைக்கப்பட்டது. கடைசியாக, 2011இல் உயர்த்தப்பட்டது. கடந்த ஆறு ஆண்டுகளாகப் பேருந்து கட்டணம் மாற்றியமைக்கப்படவில்லை. பணியாளர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு, ஓய்வூதியங்கள், எரிபொருள் விலை உயர்வு போன்ற காரணங்களை முன்னிட்டு, பேருந்து கட்டணம் மாற்றி அமைக்க வேண்டிய தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மாநகரப் பேருந்துகளுக்கான அதிகபட்சக் கட்டணம் ரூ.12இல் இருந்து ரூ.19 ஆகவும், விரைவுப் பேருந்துகளுக்கான கட்டணம் 30 கி.மீக்கு ரூ.17இல் இருந்து ரூ.24 ஆகவும், இடைநில்லா பேருந்துகளுக்கான கட்டணம் 30 கி.மீக்கு ரூ.18இல் இருந்து ரூ.27 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாநகரப் பேருந்துகளுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.3இல் இருந்து ரூ.5 ஆக உயர்ந்துள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 20 ஜன 2018