மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 ஜன 2018

மனிதனை அழிக்கவா டெக்னாலஜி?

மனிதனை அழிக்கவா டெக்னாலஜி?

அன்றாட வாழ்வில் தவிர்க்கமுடியாத அளவுக்கு மாறிவிட்டது தொழில்நுட்பம். ஒரு நிமிடம் காணாமல் போனாலும் துடிதுடித்துப்போகும் நிலையை மனிதனிடம் ஏற்படுத்தி ஒரு செயற்கை ஆக்சிஜன் போல இவை மாறிவிட்டன. அப்படி அபரிமிதமாக வளர்ந்து நிற்கும் டெக்னாலஜியை எந்தளவுக்கு கெட்டவிதத்தில் பயன்படுத்த முடியும் என்பதை விளக்கும் கேரக்டரில் ஜீவா நடித்திருக்கும் திரைப்படம்தான் ‘கீ’.

நேற்று வெளியாகியிருக்கும் இதன் ட்ரெய்லரில் தொடக்கத்திலேயே, ‘ஹெட்ஃபோன் மூலம் ட்ரெய்லரைப் பார்த்து அதன் முழு தாக்கத்தை அடையுங்கள்’ எனப் படக்குழு சொல்கிறது. இந்த அறிவிப்பு ஏன் என்ற கேள்வி எழாத அளவுக்குத் திரைப்படத்தின் இசைக்கோர்ப்பு வேலையில் மெனக்கெட்டிருக்கிறார்கள். துல்லியமான இசையை சரியான நேரத்தில், ஒன்றுடன் ஒன்று மோதி களேபரமான சத்தத்தை செவிக்குள் செலுத்தாமல் கிளீனாகவே செல்கிறது ட்ரெய்லர்.

பரீட்சையில் வெற்றிபெற சக மாணவர்களுக்குத் திருட்டுத்தனமாக உதவுவது, டெக்னிக்கலாகப் பெண்களை இம்ப்ரெஸ் செய்து கவர்வது என ஜீவாவின் கேரக்டர் அராஜகம் செய்கிறது. ஐஃபோனில் இருக்கும் ‘சிரி’ என்கிற செயற்கை நுண்ணறிவுடன் பேசிப் பழகுவது வரை இக்கால இளைஞர்கள் செய்யும் டெக்னிக்கல் சில்மிஷங்களைப் பதிவு செய்திருப்பது, இயக்குநர் கலீலின் திறமையைக் காட்டுகிறது.

ஹீரோ - ஹீரோயினைக் கலாய்ப்பதற்காகவே படத்தில் சேர்க்கப்படும் ஆர்.ஜே.பாலாஜி இந்தப் படத்தில் தொழில்நுட்பத்தை மடக்கும் வேலையைச் செய்கிறார். ‘இந்த டெக்னாலஜியெல்லாம் வந்ததுக்கு அப்பறம், வாழ்றதே பிரச்னையா போச்சேடா’ என்று பாலாஜி சொல்ல, ‘இனி இந்த கம்ப்யூட்டர் வளர்ச்சியை யார் நினைச்சாலும் தடுக்க முடியாது’ என்கிறார் டெக்னிக்கல் எக்ஸ்பெர்ட்டான ஜீவா. அப்படி எதுதான் இத்திரைப்படத்தின் கதைக்கரு என்ற கேள்விக்கு ட்ரெய்லரிலேயே பதிலிருக்கிறது. ப்ளூவேல் கேமை விட ஆபத்தான ஒரு விளையாட்டை மக்கள் விளையாடுவதாகவும், அதனால் ஏற்படும் உயிர்பலிகளையும் ட்ரெய்லரில் காட்டுகிறார்கள். அப்படி என்ன கேமாக இருக்கும் என்று யோசிக்கவைத்து, டெக்னாலஜி உலகின் புதிய கதவுகளைத் திறந்துவிடுகிறது கீ.

கீ ட்ரெய்லர்

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 20 ஜன 2018