மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 ஜன 2018

ரஜினி மக்கள் மன்றக் குழுவின் முதல் கூட்டம்!

ரஜினி மக்கள் மன்றக் குழுவின் முதல் கூட்டம்!

ரஜினி மக்கள் மன்றக் குழுவின் முதல் கூட்டம் வேலூரில் நேற்று (ஜனவரி 19) நடந்தது. நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதன் முன்னோட்டமாக இது பார்க்கப்படுகிறது.

கடந்த டிசம்பர் 31ஆம் தேதியன்று, விரைவில் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தார் நடிகர் ரஜினிகாந்த். இதையடுத்து, அவரது ரசிகர் மன்றங்கள் அனைத்தும் ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்தப் பெயரில் ஒரு செயலியும் இணையப் பக்கமும் தொடங்கப்பட்டது. அதன்பிறகு, ரஜினியின் அரசியல் செயல்பாடுகள் பற்றி மற்றவர்களே அதிகம் கருத்து தெரிவித்தனர்.

சில ஊடகங்களில் ரஜினி தனது அரசியல் கட்சி குறித்து குழப்பத்துடன் இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. அதே வேளையில், பிப்ரவரி 21ஆம் தேதி புதிய கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடப் போவதாகத் தெரிவித்தார் நடிகர் கமல்ஹாசன். இந்த நிலையில், நேற்று ரஜினி மக்கள் மன்றத்தின் ஆலோசனை கூட்டம் வேலூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடந்தது. இதில் அவரது ரசிகர் மன்றங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ரஜினிகாந்த் தனக்கு நம்பிக்கையான சிலரைக்கொண்டு ஒரு குழுவை அமைத்துள்ளார் என்றும், இந்தக் குழுவினர் தமிழகத்திலுள்ள ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்கள் என்றும், அந்தந்த மாவட்டத்திலுள்ள பிரச்னைகள் பற்றிய மக்களின் கருத்துகளை இவர்கள் தொகுப்பார்கள் என்றும், ஏற்கனவே தகவல் வெளியானது. இவர்கள் சொல்வதன் அடிப்படையில், தமிழகம் முழுக்க ரஜினி சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று சொல்லப்பட்டது.

இதன் முதல்படியாக, ரஜினி ரசிகர்களை மக்கள் மன்ற உறுப்பினர்களாக்கும் செயல்பாடுகள் வேலூரில் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரஜினி மன்றங்கள் அதிகாரபூர்வமான நிர்வாகிகள் இல்லாமல் செயல்படுவதாகச் சொல்லப்படுகிறது. இந்த மன்றங்களில் புதிய நிர்வாகிகளை இந்த குழுவினர் நியமனம் செய்வார்கள் என்றும், இவர்கள் மூலமாக சுமார் ஒரு கோடி தொண்டர்களை ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் ஆக முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியின் சுற்றுப்பயணத்தின்போது, இவர்களில் இருந்து புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களையும் 60 பிரிவாகப் பிரித்து, தங்களது செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளது ரஜினி மக்கள் மன்றக் குழு. வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 13 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் 40 ஆயிரம் பேர் வீதம் சுமார் 5 லட்சம் பேரை ரஜினி மக்கள் மன்ற உறுப்பினராக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

சனி 20 ஜன 2018